காஞ்சிபுரம் : தங்க சேமிப்பு திட்டத்தில், காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்திற்கு, 396 கிராம் தங்கம் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பு அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தின் கீழ், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்ட தலைமை தபால் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.டிச., 28ம் தேதி முதல் ஜன., 1ம் தேதி வரை, தங்கம் சேமிப்பு திட்டத்தில் பொது மக்கள் சேர்ந்து பயன்பெறலாம் என, அஞ்சல் துறை அறிவித்தது.
அதன்படி, காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்தின் கீழ், 396 கிராம் தங்கம் விற்பனையாகி உள்ளன. அதற்குரிய விற்பனை ரசீது, வாடிக்கையாளர்களுக்கு அஞ்சல் துறை வழங்கி உள்ளது.இதன் மூலமாக, 19.80 லட்சம் ரூபாய், மத்திய அரசிற்கு வருவாய் கிடைத்துள்ளது என, அஞ்சல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE