சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி

Added : ஜன 06, 2021
Share
Advertisement
நகை, டூ - வீலர் திருட்டுஉத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த, அனுமந்தண்டலம் கூட்டுசாலையைச் சேர்ந்தவர் மரிய பாஸ்டினா, 30, தனியார் பள்ளி ஆசிரியை.சென்னைக்கு சென்று, நேற்று காலை, குடும்பத்துடன் வீடு திரும்பிய இவர், கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.உள்ளே, பீரோவில் இருந்த, 5 சவரன் தங்க நகையும், வெளியே நிறுத்தப்பட்ட, 'ராயல் என்பீல்டு' இருசக்கர

நகை, டூ - வீலர் திருட்டு

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த, அனுமந்தண்டலம் கூட்டுசாலையைச் சேர்ந்தவர் மரிய பாஸ்டினா, 30, தனியார் பள்ளி ஆசிரியை.சென்னைக்கு சென்று, நேற்று காலை, குடும்பத்துடன் வீடு திரும்பிய இவர், கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.உள்ளே, பீரோவில் இருந்த, 5 சவரன் தங்க நகையும், வெளியே நிறுத்தப்பட்ட, 'ராயல் என்பீல்டு' இருசக்கர வாகனம் திருடுபோனது தெரிந்தது. மரிய பாஸ்டியாவின் புகாரை, பெருநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

பாம்பை கொன்ற இருவர் கைது

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் பேரூராட்சி, சங்குமேட்டுத்தெருவில் தண்டுமாரியம்மன் கோவில் உள்ளது.இதன் அருகே இருந்த புற்றை, அதே பகுதி செந்தில், 47, தன் நிலத்தை சுத்தம் செய்தபோது, நேற்று முன்தினம், ஜே.சி.பி., வைத்து இடித்தார். அப்போது, புற்றில் இருந்த நாகப்பாம்பு இறந்தது.இதையறிந்த பொதுமக்கள், பாம்பை கொன்ற நபர்களை கைது செய்ய கோரி, போராட்டம் நடத்தினர்.இதையடுத்து, வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ், செந்தில், ஜே.சி.பி., ஓட்டுனர் ஜெய்சங்கர், 27, மீது வழக்கு பதிவு செய்து, வனத்துறையினர் கைது செய்தனர். ஜே.சி.பி., இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X