கொச்சி:கேரள தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக, கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில், 20 பேர் மீது, என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளளது.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது.மேற்காசிய நாடான, ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து, கேரளாவுக்கு, 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்ட விவகாரம் தொடர்பாக, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது.
![]()
|
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ், கேரள முன்னாள் தலைமை செயலர் சிவசங்கர் உட்பட பலரை, என்.ஐ.ஏ., கைது செய்துள்ளது.இந்த விவகாரத்தில் நடந்த சட்ட விரோத பண பரிமாற்றம் பற்றி, அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.
இந்நிலையில், கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில், இந்த வழக்கு தொடர்பாக, 20 பேர் மீது, என்.ஐ.ஏ., நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஸ்வப்னா சுரேஷ் உட்பட, 20 பேரின் பெயர்கள், குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது. 'ஸ்வப்னா, சரித் ஆகியோர் ஐக்கிய அரபு அமீரக துாதரகத்தில் வேலைப்பார்த்த முன்னாள் ஊழியர்கள். துாதரகம் பெயரில் தங்கம் கடத்தலுக்கு இருவரும், தங்கள் பணியை பயன்படுத்திக் கொண்டனர்' என, குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE