பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் நெசவு தீவிரம்

Added : ஜன 06, 2021
Share
Advertisement
பள்ளிப்பட்டு : பொங்கல் பண்டிகையுடன் நடப்பு நெசவு கணக்கு நிறைவு பெறுவதால், நெசவாளர்கள் முழுவீச்சில் பணியாற்றி வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு சுற்றுப் பகுதியைச் சேர்ந்த நல்லவானம்பேட்டை, பொதட்டூர்பேட்டை, சொரக்காய்பேட்டை, அத்திமாஞ்சேரிபேட்டை, வெங்கல்ராஜிகுப்பம் உள்ளிட்ட கிராமங்களில், பாரம்பரியமாக நெசவு தொழில் நடந்து வருகிறது.இதில்,

பள்ளிப்பட்டு : பொங்கல் பண்டிகையுடன் நடப்பு நெசவு கணக்கு நிறைவு பெறுவதால், நெசவாளர்கள் முழுவீச்சில் பணியாற்றி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு சுற்றுப் பகுதியைச் சேர்ந்த நல்லவானம்பேட்டை, பொதட்டூர்பேட்டை, சொரக்காய்பேட்டை, அத்திமாஞ்சேரிபேட்டை, வெங்கல்ராஜிகுப்பம் உள்ளிட்ட கிராமங்களில், பாரம்பரியமாக நெசவு தொழில் நடந்து வருகிறது.இதில், வெங்கல்ராஜிகுப்பத்தில் மட்டும் கைத்தறி நெசவும், இதர பகுதிகளில் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவும் மேற்கொள்ளப்படுகிறது.

பருத்தி லுங்கி மற்றும் பருத்தி சேலைகள் நெய்யப்படுகின்றன.நெசவாளர்கள் பொங்கல் பண்டிகையை தொழில் ஆண்டாக கணக்கிட்டு வருகின்றனர். போகி பண்டிகையுடன், நடப்பு கணக்கு நிறைவு பெறுகிறது. பொங்கலுக்கு பின், நல்ல நாள் பார்த்து, புதிய கணக்குடன் தொழிலை மீண்டும் துவங்குவர்.இடைப்பட்ட விடுமுறையில், தாயம் விளையாடுவது, வீர விளையாட்டுகளில் பங்கேற்பது, வனபோஜன விருந்து நடத்துவது என, பல்வேறு கேளிக்கைகளில் ஈடுபடுவார்கள்.

விடுமுறை நாளில் தேவைப்படும் நிதியை ஈடுசெய்யும் விதமாக, தற்போது, கூடுதல் நேரம் நெசவு செய்கின்றனர். அதிகாலை முதல், நள்ளிரவை தாண்டியும் தறிகள் இயக்கப்பட்டு வருகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X