பொது செய்தி

தமிழ்நாடு

நால் ரோடு சிக்னல் அருகே மது 'பார்' அமைக்க எதிர்ப்பு

Added : ஜன 06, 2021
Share
Advertisement
பல்லடம்:பல்லடம் நால் ரோடு சிக்னல் பகுதியில்,கோவை, அவிநாசி, பொள்ளாச்சி, உடுமலை செல்லும் மாநில நெடுஞ்சாலை இணைகின்றன.ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் இப்பகுதியில், தனியார் நிறுவனம் ஒன்று பார் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால், அப்பகுதியினர், மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பிய மனு:பல்லடத்தில் ஏற்கனவே 'டாஸ்மாக்' மதுக்கடைகள்,

பல்லடம்:பல்லடம் நால் ரோடு சிக்னல் பகுதியில்,கோவை, அவிநாசி, பொள்ளாச்சி, உடுமலை செல்லும் மாநில நெடுஞ்சாலை இணைகின்றன.ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் இப்பகுதியில், தனியார் நிறுவனம் ஒன்று பார் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால், அப்பகுதியினர், மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பிய மனு:பல்லடத்தில் ஏற்கனவே 'டாஸ்மாக்' மதுக்கடைகள், விதிமுறைகளை மீறி தேசிய நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வருகின்றன. இவற்றால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
மதுக்கடைகள் வாகன விபத்துக்கும் காரணமாக அமைந்துள்ளதால் அவற்றை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். இச்சூழலில், போக்குவரத்து நிறைந்த நால் ரோடு சிக்னல் பகுதியில், தனியார் நிறுவன பார் அமைக்கும் முயற்சி நடந்து வருகிறது.இப்பகுதியில், நெடுஞ்சாலை துறை, நகராட்சி, பத்திரப்பதிவு ஆபீஸ், கோர்ட் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன.
அரசு சார்ந்த பணிகளுக்காக, ஏராளமான பொதுமக்கள் தினசரி இங்கு வந்து செல்கின்றனர்.இப்பகுதியில் பார் அமைத்தால், விபத்துகளால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே, 'பார்' அமைக்கும் அனுமதியை ரத்து செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X