பொது செய்தி

தமிழ்நாடு

பூ விவசாயிகள் கவலை

Added : ஜன 06, 2021
Share
Advertisement
திருத்தணி : வடகிழக்கு பருவ மழையால், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், நேற்று, அதிகாலை, 3:00 மணி முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.பலத்த மழையால், நீர், நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தொடர் மழையால், பூ பயிரிட்ட விவசாயிகள் பூக்களை பறிக்க முடியாமல் கடும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, திருத்தணி அடுத்த, வேலஞ்சேரி, தாழவேடு,

திருத்தணி : வடகிழக்கு பருவ மழையால், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், நேற்று, அதிகாலை, 3:00 மணி முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

பலத்த மழையால், நீர், நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தொடர் மழையால், பூ பயிரிட்ட விவசாயிகள் பூக்களை பறிக்க முடியாமல் கடும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, திருத்தணி அடுத்த, வேலஞ்சேரி, தாழவேடு, முருக்கம்பட்டு, கோபாலாபுரம், அருங்குளம், பூனிமாங்காடு, கோதண்டராமபுரம், பட்டாபிராமபுரம், விநாயகபுரம் ஆகிய கிராமங்களில், பூ பயிரிட்ட விவசாயிகள் தொடர் மழையால் பூ பறிக்க முடியாததால் கடும் நஷ்டம் அடைந்துள்ளனர்.

தொடர் மழையால், திருத்தணி முருகன் மலைக்கோவிலில் குறைந்த அளவில் பக்தர்கள் வந்திருந்தனர். இதே போல், திருவள்ளூர் நகராட்சியில், தொடர் மழையால் சாலை மற்றும் தெருக்களில் மழை நீர் தேங்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X