பொது செய்தி

தமிழ்நாடு

நுால் விலை நிர்ணயம் 'சைமா' வலியுறுத்தல்

Added : ஜன 06, 2021
Share
Advertisement
திருப்பூர்:மூன்று அல்லது ஐந்து மாதங்களுக்கு ஒருமுறை மட்டும் நுால் விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென, திருப்பூர் சைமா சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.சமீபத்தில் நடந்த, தொழில் கூட்டமைப்பு கூட்டத்திலும், நுாற்பாலைகள், இரண்டு மாதங்களுக்கு நுால் விலையை உயர்த்த வேண்டாம்; நுாலிழையை தட்டுப்பாடின்றி வினியோகம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.அதன்படி, நுால் விலை உயராது

திருப்பூர்:மூன்று அல்லது ஐந்து மாதங்களுக்கு ஒருமுறை மட்டும் நுால் விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென, திருப்பூர் சைமா சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.சமீபத்தில் நடந்த, தொழில் கூட்டமைப்பு கூட்டத்திலும், நுாற்பாலைகள், இரண்டு மாதங்களுக்கு நுால் விலையை உயர்த்த வேண்டாம்; நுாலிழையை தட்டுப்பாடின்றி வினியோகம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.அதன்படி, நுால் விலை உயராது என நம்பிக்கையுடன் இருந்த தொழில்துறையினர், விலை உயர்வால் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், நுால் விலை உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென, 'சைமா' சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து 'சைமா' சங்கம் சார்பில், வெளியிட்ட அறிக்கை:உயர்த்தப்பட்ட நுால் விலையை, மறுபரிசீலனை செய்து, அதிகபட்ச அளவில் விலையை குறைக்க வேண்டும். உள்நாட்டு தேவைக்கு போக, மீதியுள்ள நுாலியை மட்டும் ஏற்றுமதி செய்ய வேண்டும். பின்னலாடை தொழில்கள் சீராக இயங்க, நுால் விலை நிலையாக இருக்க வேண்டும்.நுாற்பாலை மற்றும் பின்னலாடை தொழில்கள் சுமூகமாக இயங்க, மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மட்டும் நுால் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X