திருப்பூர்:திருப்பூர், காலேஜ் ரோடு, ஸ்ரீ ஐயப்பன் கோவிலில், நாராயணீயம் மற்றும் பாராயணம் நிகழ்ச்சி நடந்தது.நாராயணீயம் என்பது ஒரு ஆன்மீக நுால். இதனை, மேல்பத்துார் நாராயண பட்டத்திரி எழுதினார். ஸ்ரீமத் பாகவதத்திலுள்ள 18,000 பாடல்களை சுருக்கி, 1034 பாடல்களாக எழுதினார். சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இந்த நுாலிற்கு, நாராயணீயம் என பெயரிட்டார்.கேரளமாநிலம், குருவாயூரில், குருவாயூரப்பன் சன்னிதானத்தில், அமர்ந்து இதை பாடினார். குருவாயூரப்பன் அப்பாடலை கேட்டு மகிழ்ந்து, ஒவ்வொரு தசகத்துக்கும் தலையாட்டி ஆமோதித்ததாக வரலாறு உள்ளது. ஸ்ரீமத் பாகவத புராணத்திலிருந்து விஷ்ணுவின் அவதாரங்களை பக்தியுடன் பாடி, நாராயணீயம் என்கிற தொகுப்பை வழங்கினார்.இதை கேட்பவர், நீண்டஆயுள், திடகாத்திரமான உடல், ஆரோக்கியம், நல்ல வாழ்க்கை ஆகிய நலன்களை பெறுவர் என்பது ஐதீகம். அவ்வகையில், திருப்பூர், காலேஜ் ரோடு, ஸ்ரீ ஐயப்பன் கோவிலில், நேற்று, நாராயணீயம் மற்றும் பாராயணம் நிகழ்ச்சி நடந்தது. இன்றும் காலை, 8:00 முதல், பகல், 12:30 மணி வரை நடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE