பொது செய்தி

தமிழ்நாடு

தைப்பூசம் விழாவுக்கு அரசு விடுமுறை: பழனிசாமி அறிவிப்பு

Updated : ஜன 07, 2021 | Added : ஜன 06, 2021 | கருத்துகள் (19+ 108)
Share
Advertisement
சென்னை: 'தைப்பூசத் திருவிழா, பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படும்' என, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார்.அவரது அறிக்கை:தமிழ் கடவுளாகிய, முருகப் பெருமானை சிறப்பித்து, தமிழகத்தில் கொண்டாடப்படும் திருவிழாக்களில், மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா. இவ்விழா, தமிழகம் மட்டுமின்றி, கேரளாவிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா, மொரீஷியஸ்,
 தைப்பூசம் விழா, அரசு விடுமுறை ,முதல்வர் இ.பி.எஸ்., அறிவிப்பு

சென்னை: 'தைப்பூசத் திருவிழா, பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படும்' என, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:தமிழ் கடவுளாகிய, முருகப் பெருமானை சிறப்பித்து, தமிழகத்தில் கொண்டாடப்படும் திருவிழாக்களில், மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா. இவ்விழா, தமிழகம் மட்டுமின்றி, கேரளாவிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா, மொரீஷியஸ், இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும், தைப்பூசத் திருவிழா, வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.பல்வேறு மாவட்டங்களுக்கு, சுற்றுப்பயணம் சென்றபோது, இலங்கை, மொரீஷியஸ் நாடுகளில், தைப்பூசத் திருவிழாவிற்கு, பொது விடுமுறை அளிப்பது போன்று, தமிழகத்திலும் அளிக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதை பரிசீலித்து, வரும், 28ம் தேதி கொண்டாடப்படும், தைப்பூசத் திருவிழாவை, பொது விடுமுறை நாளாக அறிவிக்கவும், இனி வரும் ஆண்டுகளிலும், தைப்பூசத் திருவிழா நாளை, பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு, முதல்வர் தெரிவித்துள்ளார்.




பா.ஜ., நன்றி



பா.ஜ., கோரிக்கையை ஏற்று, தைப்பூசத் திருவிழாவை, பொது விடுமுறை பட்டியலில் சேர்த்து, விடுமுறை அறிவித்துள்ளதாக, முதல்வருக்கு, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி சார்பில், அக்கட்சி தலைவர் முத்துரமேஷ், இந்து தமிழர் கட்சி தலைவர் ராமரவிக்குமார் ஆகியோரும் நன்றி தெரிவித்துள்ளனர்.


முஸ்லிம் லீக் நன்றி

தைப்பூசத் திருவிழாவிற்கு, பொது விடுமுறை அறிவித்த அரசுக்கு, தமிழ்நாடு முஸ்லிம் லீக் நன்றி தெரிவித்துள்ளது.

அக்கட்சி தலைவர் முஸ்தபா அறிக்கை: தமிழகத்தில் கொண்டாடப்படும் திருவிழாக்களில், தைப்பூசத் திருவிழா முக்கியமானது. இலங்கை மற்றும் மொரீஷியஸ் நாடுகளில், தைப்பூசத் திருவிழாவிற்கு, பொது விடுமுறை அளிப்பதுபோல், தமிழகத்திலும் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என, அனைத்து தரப்பு மக்களும், அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.அதை ஏற்று, வரும், 28ம் தேதி பொது விடுமுறை அறிவித்த அரசுக்கு நன்றி.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (19+ 108)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Subramanian - Chennai,இந்தியா
08-ஜன-202112:42:36 IST Report Abuse
S.Subramanian ♣ Very Good decision. இந்துக்கள் ஓட்டுகள் முழுமையாக கிடைக்கும்.
Rate this:
Cancel
Indian Ravichandran - Chennai,இந்தியா
06-ஜன-202120:50:08 IST Report Abuse
Indian  Ravichandran முதல்வரின் சிறப்பான அறிவிப்பு, பிஜேபி முருகன் அவர்களின் சிறப்பான கோரிக்கை. தமிழ் கடவுள் முருகனுக்கு வெற்றி வெற்றி.
Rate this:
Cancel
06-ஜன-202116:53:41 IST Report Abuse
ஆப்பு தைப்பூசம் மட்டும்தானா? கந்த சஷ்டி, சூரசம்ஹாரம், ஆடிக்கிருத்திகைன்னு லீவு உட்டு அசத்துங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X