சர்வதேச கராத்தே போட்டி: மாணவ, மாணவியர் சாதனை

Added : ஜன 06, 2021
Share
Advertisement
குன்னுார்:சர்வதேச கராத்தே போட்டியில் சாதித்த நீலகிரி மாணவ, மாணவியருக்கு, குன்னுாரில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.சர்வதேச அளவிலான கராத்தே போட்டிகள்,'ஆன்லைன்' மூலம் இலங்கையில் நடந்தது. அதில், இந்தியா உட்பட, 30 நாடுகளை சேர்ந்த நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். நீலகிரியில் இருந்து ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கள், 12 பேர் பங்கேற்றனர். 15 வயதுக்கு உட்பட்டோர் போட்டியில்,

குன்னுார்:சர்வதேச கராத்தே போட்டியில் சாதித்த நீலகிரி மாணவ, மாணவியருக்கு, குன்னுாரில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.சர்வதேச அளவிலான கராத்தே போட்டிகள்,'ஆன்லைன்' மூலம் இலங்கையில் நடந்தது. அதில், இந்தியா உட்பட, 30 நாடுகளை சேர்ந்த நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். நீலகிரியில் இருந்து ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கள், 12 பேர் பங்கேற்றனர். 15 வயதுக்கு உட்பட்டோர் போட்டியில், மாணவி ராகேஷ், மாணவி ஹரிபிரியா, 13 வயதுக்கு உட்பட்டோரில் அனுசுயாஸ்ரீ ஆகியோர் முதலிடம் பெற்று தங்கம் வென்றனர். 10 வயதுக்கு உட்பட்டோரில், தனிஷ்கா, 2வது இடமும், விஜய் விக்னேஷ், 3வது இடமும், 14 வயது பிரிவில், யுவனேஸ்வரன், 3வது இடமும் பெற்றனர். இவர்களுக்கு இலங்கையில் இருந்து அனுப்பிவைத்த சான்றிதழ்கள் வழங்கும் விழா, குன்னுாரில் நடந்தது.நீலகிரி மாவட்ட கராத்தே சங்க முதன்மை பயிற்சியாளர் ராமகிருஷ்ணன், செயலாளர் ஜோசப் பாக்கிய செல்வம் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினர். பயிற்சியாளர்கள் ஜான், நித்யா, பாண்டியன், உதயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X