சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாகனத்தில் சென்றவர் தவறி விழுந்து பலி

Added : ஜன 06, 2021
Share
Advertisement
கோத்தகிரி:கோத்தகிரி அருகே, இருசக்கர வாகனத்தில் சென்றவர், பன்றி குறுக்கே வந்ததால், நிலை தடுமாறி விழுந்து உயிரிழந்தார்.கோத்தகிரி பெட்டட்டி கிராமத்தை சேர்ந்த குமார்,49, விவசாயி. வேலை நிமித்தமாக, தனது இருசக்கர வாகனத்தில் பெட்டட்டி சுங்கம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, பன்றி குறுக்கே வந்துள்ளது.இதனால், நிலை தடுமாறிய குமார், சாலையில் விழுந்துள்ளார். அதில்,

கோத்தகிரி:கோத்தகிரி அருகே, இருசக்கர வாகனத்தில் சென்றவர், பன்றி குறுக்கே வந்ததால், நிலை தடுமாறி விழுந்து உயிரிழந்தார்.கோத்தகிரி பெட்டட்டி கிராமத்தை சேர்ந்த குமார்,49, விவசாயி. வேலை நிமித்தமாக, தனது இருசக்கர வாகனத்தில் பெட்டட்டி சுங்கம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, பன்றி குறுக்கே வந்துள்ளது.இதனால், நிலை தடுமாறிய குமார், சாலையில் விழுந்துள்ளார். அதில், தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, அதிகளவில் ரத்தம் வெளியேறியுள்ளது. அருகில் இருந்தவர்கள், குமாரை குன்னுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.முதலுதவி சிகிச்சைக்கு பின், கோவை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்த குமாருக்கு, மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். கோத்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X