ஊட்டி:நீலகிரியில், படைவீரர் கொடிநாள் வசூலில் இலக்கை தாண்டி, 64 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு படைவீரர்கள் தங்களது இளமை காலத்தில் குடும்பத்தை விட்டு பிரிந்து பல்வேறு கடினமான பணிகளை, நமது தேசத்திற்காக தன்னலம் கருதாது பணியாற்றி வருகின்றனர். பணியின் போது, தங்களது உயிர், உடல் உறுப்புகளை இழந்து நாட்டிற்காக அரும் பணியாற்றி வருகின்றனர்.அவர்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில், அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவை, படை வீரர் கொடிநாள் நிதி வசூல் மூலம் திரட்டப்படும் நிதியிலிருந்து வழங்கப்படுகிறது.அதன்படி, நீலகிரியில், அனைத்து அரசு துறைகளில், கொடி நாள் வசூல் செய்யப்படுகிறது. 2017-18ம்ஆண்டில், கொடி நாள் வசூலாக, 43 லட்சத்து 12 ஆயிரத்து 400 ரூபாய் இலக்கை அரசு நிர்ணயித்தது. ஆனால், நீலகிரியில், 64 லட்சத்து 10 ஆயிரத்து 392 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தமிழக கவர்னர் வழங்கிய பாராட்டு சான்றிதழை, முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி இயக்குனர் மேஜர் சரவணன், கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் வழங்கினார்.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில்,''படை வீரர் கொடிநாள் நிதி வசூலில், இலக்கை தாண்டி கூடுதலாக நிதி வசூல் செய்ததற்கு, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், மாவட்ட நிர்வாகத்தை கவுரவித்து பாராட்டு நற்சான்றிதழ் வழங்கியுள்ளார். நிதி திரட்டிய அனைத்து அரசு அலுவலர்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE