ஊட்டி,:தைப்பூச திருநாளை, பொது விடுமுறையாக அரசு அறிவித்துள்ளதால், மலை மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஓம்காரனந்தா சுவாமிகள்,- சாமியார் மலை, பந்தலுார்: ஒவ்வொரு ஆண்டும், முருகன் கோவில்களுக்கு பக்தர்கள் விரதமிருந்து சென்று நேர்த்தி கடன்களை செலுத்தும் நிலையில், அதற்கு ஏதுவாக, அரசு விடுமுறை அறிவித்துள்ளது வரவேற்கக் கூடியது. இதன்மூலம் ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மாநில அரசுக்கு நன்றியை தெரிவிக்கிறேன்.நடராஜன், செயலாளர், சிவன் மலை கிரிவலம் குழு, கூடலுார்: அரசு விடுமுறை இல்லாததால்,'தைப்பூசம் அன்று ஆறுபடை கோவிலுக்கு செல்ல முடியவில்லை' என, பக்தர்கள் ஆதங்கப்பட்டு வந்தனர். தற்போது, தைப்பூசத்துக்கு அரசு விடுமுறை அளித்துள்ளதால், அனைவரும் மகிழ்ச்சியாக குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று வர முடியும். இதனை வரவேற்கிறோம்.ஜெயபிரகாஷ், ஹிந்து முன்னணி, குன்னுார்: ஆங்கில புத்தாண்டுக்கு விடுமுறை இருக்கும் நிலையில், தமிழர் திருநாள் தைப்பூசத்துக்கு விடுமுறை இல்லாமல் இருந்தது, பெரும் குறையாக இருந்தது. பள்ளி நாட்களில் விடுமுறை இல்லாததால், பலருக்கு கோவிலுக்கு செல்ல முடியாது. தற்போது,அரசு விடுமுறை அளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ரவி,- ஐயப்ப பக்தர்கள் குழு உறுப்பினர்,- தங்காடு ஓரநள்ளி: தமிழ் கடவுளான முருக பெருமானை தமிழகம் மட்டுமின்றி, பல நாடுகளில், முருக பக்தர்கள் தரிசித்து, தைப்பூச திருவிழாவை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, தைப்பூசத்துக்கு, அரசு பொது விடுமுறை அளித்திருப்பதை, ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில் வரவேற்கிறோம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE