பொது செய்தி

தமிழ்நாடு

அம்மா 'மினி கிளினிக்' பயன் பெற அழைப்பு

Added : ஜன 06, 2021
Share
Advertisement
கூடலுார்:கூடலுார், ஓவேலி சூண்டியில் அம்மா 'மினி கிளினிக்' திறக்கப்பட்டது.விழாவுக்கு, மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார். விழாவில், கர்ப்பிணி களுக்கு, சத்துணவு பரிசு பெட்டகம்' வழங்கினார்.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ''இங்கு தலா ஒரு டாக்டர், செவிலியர், மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இங்கு அனைத்து அடிப்படை மருத்துவ

கூடலுார்:கூடலுார், ஓவேலி சூண்டியில் அம்மா 'மினி கிளினிக்' திறக்கப்பட்டது.விழாவுக்கு, மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார். விழாவில், கர்ப்பிணி களுக்கு, சத்துணவு பரிசு பெட்டகம்' வழங்கினார்.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ''இங்கு தலா ஒரு டாக்டர், செவிலியர், மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இங்கு அனைத்து அடிப்படை மருத்துவ சிகிச்சைகள் மற்றும் அடிப்படை மருத்துவ பரிசோதனைகள் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.நிகழ்ச்சியில், சுகாதாரதுறை துணை இயக்குனர் பாலுசாமி, வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன், கூடலுார் ஆர்.டி.ஓ.,ராஜ்குமார், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வினோத் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X