கோத்தகிரி:கோத்தகிரி நகர் பகுதியில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் தலைமையில், அலுவலர்கள் சிவராஜ் மற்றும் நந்தகுமார் ஆகியோர், நேற்று மாலை கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.கோத்தகிரி பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட், காமராஜர் சதுக்கம், ராம்சந்த் மற்றும் டானிங்டன் பகுதிகளில் நடந்த ஆய்வில், பேக்கரி மற்றும் தேனீர் கடைகளில் சாயம் கலந்த கலப்படம் தேயிலை பயன்படுத்தியது தெரியவந்தது.கலப்படம் தேயிலையை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடை உரிமையாளர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், நகர் பகுதியில், முக கவசம் அணியாதவர்களுக்கு, 4,000 ரூபாய் அபராதம் விதித்து எச்சரித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE