தமிழகம் என்றுமே தன் நினைவை விட்டகலாதிருக்க வேண்டிய ஆளுமைகளுள் ஒருவரே கல்கி. இவரது அயராத முயற்சியால், தமிழ் பாட்டு கிளர்ச்சியால் விளைந்தது தான், கச்சேரிகளில் தமிழ் பாடல்களை மட்டுமே பாட வேண்டும் எனும் ஓர் இயக்கம். இத்தகைய என்ணமுடைய சக சிந்தனையாளர்கள், இசை பண்பாளர்கள் மற்றும் தாங்களே முன்வந்து உதவிய புரவலர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சியால் பிறந்ததே தமிழ் இசைச் சங்கம். இங்கு, எல்லா பிரபலங்களும், தங்கள் இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளனர்.
இந்த சங்கத்தின், 78ம் ஆண்டின் இசை விழா நிகழ்ச்சிகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. இங்கு பங்கேற்று பாடும் கலைஞர்கள், ஒரு ஷரத்துக்கு உட்பட வேண்டும். தமிழ் பாடல்களை மட்டும் தான், இங்கே பாட வேண்டும். இதைவிட வேறு பேறோ, இன்பமோ வேண்டுமா என்று, இங்கு நிகழ்ச்சிகளை வழங்குபவர்கள் தங்களை முழுமூச்சாய் இதில் ஆழ்ந்து செயல்படுத்திக் கொண்டு, பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பாடுவர்.
பாடகி மஹதி, முன்னரே பாடி ஒளி - ஒலிப்பதிவு செய்யப்பட்ட தமிழ் கச்சேரி, டிச., 29ல் நேரலையாக வந்தது. எல்.ராமகிருஷ்ணன் வயலின், என்.சி.பரத்வாஜ் மிருதங்கம், சாய் சுப்ரமணியம் மோர்சிங். மஹதி சினிமாவில் பாடல்கள் பாடிக் கொண்டிருக்கும் ஒரு முன்னணி பாடகி என்றாலும், கர்நாடக சங்கீத கச்சேரிகளையும் நிகழ்த்தி, தன் பெயரை இந்த இசைப் பிரிவிலும், ஒரு உயர்வான நிலையில் இருத்திக் கொண்டு வந்திருக்கிறார்.மஹதி இரண்டாவதாக பாடிய வரமு ராகத்திற்கு, பரந்த ஆலாபனை ஒன்றை அளித்தார்.
பின்னர் வந்த மத்யமாவதிக்கும், இங்கும், ராக ஆலாபனைகள், அவருக்கு பிடித்த விதத்தில் பிருகாக்களும், குரலில் அசகாயச் செயலாற்றும் தன்மையுடன் இருந்த சங்கதிகளும், எல்லாநிலைகளிலும், தன்னுள் சதா ஓடிக்கொண்டிருக்கும் உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்தும் போக்கு நிறைந்து காணப்பட்டன.
ஐந்தாவதாக வந்த, 'ஓடோடி வந்தேன்' பாடலில், 'குழலுாதும் எழில் காணவே' எனும் வரியை, அதன் உன்னதமும், பொருளும் ஒருசேர தொனிக்கும் வண்ணமாகவே பாடினார். இதற்கு ஒரு சிட்டைஸ்வரம். இதுவும், இதற்கடுத்து வந்த நிரோஷ்டா ராக தில்லானாவும்,சங்கீத கலாநிதி மதுரை டி.என்.சேஷகோபாலன் இயற்றியது.வயலினில் எல்.ராமகிருஷ்ணன் ராகங்களுக்கு உகந்தபடி, ஆலாபனைகளைக் கொடுத்து, ஸ்வரங்களுக்குத் தக்கவிதமாக பதிலளித்துச் சிறப்பாக வாசித்தார்.
லயத்தினில், பரத்வாஜும், சாய் சுப்ரமணியமும், ஒருவருக்கொருவர் நல்ல புரிதலுடன் தனியாவர்த்தனத்தை அளித்தனர்.- எஸ்.சிவகுமார்.
மஹதி பாடிய பாடல்கள் இதோ:வரிசை எண் பாடல் ராகம் வாக்கேயக்கரர்/இயற்றியவர்1 வர்ணம் மோஹனகல்யாணி லால்குடி ஜெயராமன்2 சாகாவரம் அருள்வாய் வரமு பாரதியார்3 வழி மறைத்திருக்குது நாட்டக்குறிஞ்சி கோபாலகிருஷ்ண பாரதி4 சரவணபவ குகனே மத்யமாவதி பாபநாசம் சிவன்5 ஓடோடி வந்தேன் தர்மாவதி அம்புஜம் கிருஷ்ணா6 இசையமுதிலே தேஷ் பாரதிதாசன்6 தில்லானா நிரோஷ்டா மதுரை சேஷகோபாலன்மஹதி பாடிய பாடல்கள் இதோ
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE