சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆவணங்களை சமர்பித்தார் தாசில்தார் நடவடிக்கையில் இருந்து தப்பினார்

Added : ஜன 06, 2021
Share
Advertisement
பெரியகுளம்:வழக்கு விசாரணைக்கு ஆஜராகி பட்டா ஆவணங்களை சமர்பித்ததால் தேனி மாவட்டம் பெரியகுளம் தாசில்தார் ரத்னமாலா, நீதிமன்ற அவமதிப்பு கைது நடவடிக்கையில் இருந்து தப்பினார்.பெரியகுளம் அருகே வடுகபட்டியைச் சேர்ந்தவர் சக்திவடிவேல். இவர் அதே பகுதி முனியாண்டி (எ) மதன் என்பவரது வீட்டுடன் கூடிய காலிமனை தனக்கு சொந்தமானதுஎன பெரியகுளம் சார்பு நீதிமன்றத்தில் 2018 ல் வழக்கு

பெரியகுளம்:வழக்கு விசாரணைக்கு ஆஜராகி பட்டா ஆவணங்களை சமர்பித்ததால் தேனி மாவட்டம் பெரியகுளம் தாசில்தார் ரத்னமாலா, நீதிமன்ற அவமதிப்பு கைது நடவடிக்கையில் இருந்து தப்பினார்.

பெரியகுளம் அருகே வடுகபட்டியைச் சேர்ந்தவர் சக்திவடிவேல். இவர் அதே பகுதி முனியாண்டி (எ) மதன் என்பவரது வீட்டுடன் கூடிய காலிமனை தனக்கு சொந்தமானதுஎன பெரியகுளம் சார்பு நீதிமன்றத்தில் 2018 ல் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணைக்காக பட்டா ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தாசில்தார் ரத்னமாலாவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இரு ஆண்டுகளாக ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. தாசில்தார் ரத்னமாலாவை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்ய நீதிபதி சுந்தர்ராஜன் உத்தரவிட்டார்.நீதிமன்ற அமீனா ரமேஷ், வழக்கறிஞர் காமராஜ் நேற்று முன்தினம் தாலுகா அலுவலகத்தில் ரத்னமாலாவிடம் கைது நடவடிக்கை உத்தரவை கொடுத்தனர்.

அவர் ஒரு நாள் அவகாசம் கேட்டதால் நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டது. நேற்று சார்பு நீதிமன்றத்தில் ஆஜராகி ஆவணங்களை சமர்பித்த தாசில்தார் ரத்னமாலா கைது நடவடிக்கையில் இருந்து தப்பினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X