காங்., தோல்விக்கு காரணம் என்ன? புத்தகத்தில் பிரணாப் விளக்கம்

Updated : ஜன 06, 2021 | Added : ஜன 06, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி :‛மக்களை கவர்ந்திழுக்கும் தலைவர், கட்சியில் இல்லாமல் போனதை, காங்கிரஸ் தலைமை உணர தவறியதே, 2014 லோக்சபா தேர்தல் தோல்விக்கு வழிவகுத்தது' என, மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான பிரணாப் முகர்ஜி, தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.காங்கிரஸ் மூத்த தலைவர், பிரணாப் முகர்ஜி, வெளியுறவுத்துறை, நிதித்துறை உட்பட, பல்வேறு முக்கிய துறைகளின்
காங்., தோல்வி, காரணம், புத்தகம், பிரணாப் விளக்கம்

புதுடில்லி :‛மக்களை கவர்ந்திழுக்கும் தலைவர், கட்சியில் இல்லாமல் போனதை, காங்கிரஸ் தலைமை உணர தவறியதே, 2014 லோக்சபா தேர்தல் தோல்விக்கு வழிவகுத்தது' என, மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான பிரணாப் முகர்ஜி, தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர், பிரணாப் முகர்ஜி, வெளியுறவுத்துறை, நிதித்துறை உட்பட, பல்வேறு முக்கிய துறைகளின் அமைச்சராக பொறுப்பு வகித்தவர். கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் காலமானார்.இவர் மரணமடைவதற்கு முன், ‛தி பிரெசிடென்ஷியல் இயர்ஸ், 2012 -- 17' என்ற புத்தகத்தை எழுதினார். அந்த புத்தகம், நேற்று வெளியானது.


latest tamil news




அதில், பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டுள்ளதாவது: கடந்த, 2014 லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானபோது, குழப்பமில்லா தீர்க்கமான முடிவை மக்கள் அளித்தது, ஒருபுறம் நிம்மதி அளித்தாலும், பல ஆண்டுகளாக நான் சார்ந்திருக்கும் கட்சி படுதோல்வி அடைந்தது, மிகப் பெரிய ஏமாற்றமாகவே இருந்தது. பல ஆண்டுகளாக, மக்களின் வாழ்வுடன் ஒன்றாக கலந்த ஒரு அரசியல் கட்சி, வெறும், 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதை நம்ப முடியவில்லை. மக்களை கவர்ந்திழுக்கும் தலைவர்கள் கட்சியில் இல்லை என்பதை, தலைமை உணர தவறியதே தோல்விக்கு காரணம்.

ஜனாதிபதியாக பதவி வகித்த காலகட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடியுடன், சுமுகமான உறவு இருந்தது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்துவதற்கு முன், என்னிடம் கூட அதுபற்றி அவர் விவாதிக்கவில்லை. இதுபோன்ற நடவடிக்கைகள், திடீரென அமல்படுத்தப்படுவதே சரி என தோன்றியது. இவ்வாறு, அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr.subbanarasu Divakaran - bengaluru,இந்தியா
06-ஜன-202123:48:47 IST Report Abuse
Dr.subbanarasu Divakaran தேசிய தைலவர் பெயர் "பிரணவ்" அதாவது ஓம் என்று சொல்லும் vidam.பிரணாப் அல்ல.இடை திருத்தவும். வங்காளத்தில் வ என்பதை ப என்று சொல்கிறார்கள். அதனால் பிரணாப் ஆகிறது. பிரணாப் என்று சொல்வது பிழை.
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
06-ஜன-202121:08:29 IST Report Abuse
Sivagiri எல்லாம் தெரிஞ்சிக்கிட்டே . . . பாப்பு - வச்சிட்டாரு ஆப்பு . . .
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
06-ஜன-202120:38:30 IST Report Abuse
Bhaskaran இலங்கை தமிழாற்ப்டுகொலைக்கு இந்த புனிதரும் ஆதரவுதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X