பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் பெய்த கன மழை; விமானங்கள் புறப்பாடு தாமதம்

Added : ஜன 06, 2021
Share
Advertisement
சென்னை : சென்னை விமான நிலையத்தில், தொடர் மழை காரணமாக, பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட வேண்டிய விமானங்கள் புறப்பாடு தாமதமாகியது.சென்னையில், நேற்று முன்தினம் நள்ளிரவிலிருந்து, தொடர்ந்து மழை பெய்தது. இதனால் துாத்துக்குடி, புனே, ஆகமதாபாத், திருவனந்தபுரம்,பாட்னா, ஹூப்ளி உள்ளிட்ட நகரங்களுக்கு, நேற்று காலை முதல் பிற்பகல் வரை இயக்கப்பட்ட விமான சேவைகள், அரை மணி நேரம் வரை

சென்னை : சென்னை விமான நிலையத்தில், தொடர் மழை காரணமாக, பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட வேண்டிய விமானங்கள் புறப்பாடு தாமதமாகியது.

சென்னையில், நேற்று முன்தினம் நள்ளிரவிலிருந்து, தொடர்ந்து மழை பெய்தது. இதனால் துாத்துக்குடி, புனே, ஆகமதாபாத், திருவனந்தபுரம்,பாட்னா, ஹூப்ளி உள்ளிட்ட நகரங்களுக்கு, நேற்று காலை முதல் பிற்பகல் வரை இயக்கப்பட்ட விமான சேவைகள், அரை மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.கன மழை பெய்தாலும்,சென்னை உள்நாட்டு முனையத்தில், விமான முனையத்திலிருந்து நேரடியாக இயக்கப்பட்ட விமான சேவைகள், குறித்த நேரத்தில் புறப்பட்டு சென்றன.

இதே விமான முனையத்திலிருந்து, சற்று தள்ளி நிறுத்தப்பட்டிருந்த விமானங்களில், செல்ல வேண்டிய பயணியரை, வாகனங்களில் அழைத்துச் செல்ல நேரம் பிடித்தது. இதனால், அந்த விமானங்கள் புறப்பாடுகள் தாமதமாயின.துபாய், ஷார்ஜா, இலங்கை உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்பட்ட, பன்னாட்டு விமான சேவைகள், ஒரு மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டன. 'மழை பெய்ததால், விமான பயணியரின் உடைமைகளை, விமானங்களில் ஏற்றுவதில் தாமதம் ஏற்பட்டது' என, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X