உடுமலை ஆன்மிக பெரியோர்கள் வரவேற்பு
தைப்பூசத் திருவிழா நாளை, பொது விடுமுறையாக அறிவித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதை உடுமலை பகுதியிலுள்ள ஆன்மிக பெரியோர் மற்றும் முருக பக்தர்கள் வரவேற்றுள்ளனர்.பக்தர்கள் பெரும் மகிழ்ச்சிதமிழ் கடவுளாக அழைக்கப்படும் முருகனுக்குரிய விசேஷமான, தைப்பூச திருநாளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது பக்தர்களுக்கு பெரிதும் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. கிராமங்களில், விமரிசையாக கொண்டாடப்பட்ட தைப்பூசம் இன்று குறைந்ததற்கு பலருக்குமான பணிச்சூழலும் தான் காரணம். தற்போது முதல், தைப்பூசம் கிராம விழாவாக மீண்டும் மாறுவதற்கான சூழலை அரசு அமைத்துள்ளது.ஆறுமுகம், தத்துவவேத பாடசாலை உறுப்பினர், உடுமலைமுக்கியத்துவம் பெறும்!தைப்பூச திருநாள், தமிழகத்தில், விடுமுறை அறிவிப்பால் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பக்தர்கள், ஆன்மிக வழிபாடு மட்டுமின்றி, பண்டிகையைப் போல கொண்டாடும் நிலை உருவாகியுள்ளது. விடுமுறை அறிவிப்பு மக்களுக்கு அகமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சவுந்தரகுமார், சபரிமலை ஐயப்ப சேவா சங்க மாவட்ட பொறுப்பாளர், உடுமலைசமுதாய விழாவாக மாறும்குழந்தைகளின் கல்வி மற்றும் பணிச்சூழல் போன்ற காரணங்களால் பக்தர்கள், தனிப்பட்ட முறையில் வழிபாட்டில் ஈடுபட்டிருப்பார்கள். தற்போது குடும்ப விழாவாகவும், அனைத்து சமுதாயத்தினரும் கொண்டாடும் விழாவாகவும் மாற்றம் ஏற்படும். குடும்பமாக தைப்பூச திருநாளை கொண்டாடும்போது, இளைய தலைமுறைகள், குழந்தைகளும் சமயசடங்குகளை பற்றி அறிந்துகொள்ள முடியும்.ஜெய்சிங்லிங்கவாசகம் ஈரோடு தொண்டர்சீர் பரவுவார் குருகுலம், உடுமலை கிளை பேராசிரியர்ஆத்மதிருப்தி ஏற்படும்தைப்பூசம் விடுமுறை அறிவிப்பு, பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அவசரமில்லாமல் வழிபாட்டை ஆத்மதிருப்தியுடன் நிறைவு செய்வதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது. கிராமங்களில் விமரிசையாக இனி தைப்பூச திருநாளை கொண்டாடுவதற்கும் வாய்ப்பாக உள்ளது.அங்குபாலசுப்ரமணியம்கார்த்திகை விழா மன்ற செயலாளர், உடுமலைவழிபாட்டுக்கு ஊக்கம்முருக பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி உள்ளது. தைப்பூசத்தை அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டதை மிகவும் வரவேற்கிறோம். இது ஹிந்து மக்களின் பாரம்பரிய வழிபாட்டிற்கு ஒரு ஊக்கமாகவும், அன்றைய நாளில் முருகப்பெருமானின் கோவிலுக்குச்சென்று வழிபட நல்லதொரு வாய்ப்பாக இந்த விடுமுறை அமையும்.கார்த்திகேயன், முருகபக்தர், கணியூர்நல்லெண்ணம் விதைக்கும்பழநி முருகன் கோவில், தைப்பூச விழா, மாநிலம் முழுவதும், பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். இவ்விழாவுக்கு, தமிழக அரசு விடுமுறை அளித்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஆன்மிக விழாக்கள், மக்களின் மனதில், நல்லெண்ணங்களை விதைக்கும். அத்தகைய ஒரு விழாவுக்கு, பெரும்பான்மை மக்களின், நலன் கருதி, தமிழக அரசு, எடுத்துள்ள முடிவுக்கு, அனைத்து தரப்பினரும், வரவேற்பு அளித்து மகிழ்ந்து வருகின்றனர்.நாகராஜ், முருகபக்தர், சோமவாரப்பட்டி
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE