பொது செய்தி

தமிழ்நாடு

மெட்ரோ, மின்சார ரயில்களில் மழையால் அதிகரித்த கூட்டம்

Added : ஜன 06, 2021
Share
Advertisement
சென்னை : கன மழையால், மெட்ரோ, மின்சார ரயில்களில் நேற்று கூட்டம் அதிகரித்தது. மின்சார ரயில்களில் முக கவசம் அணியாமல், நிறைய பேர் பயணம் செய்தனர்.சென்னையில், கடற்கரை -- தாம்பரம் -- செங்கல்பட்டு -- திருமால்பூர் உட்பட, ஐந்து வழித்தடங்களில், தினமும், 660 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.கூட்டம் அதிகம் உள்ள, காலை, 7:00 மணிமுதல், 9:30 மணி வரையும், மாலை, 4:30 மணியில் இருந்து, இரவு, 7:00 மணி

சென்னை : கன மழையால், மெட்ரோ, மின்சார ரயில்களில் நேற்று கூட்டம் அதிகரித்தது. மின்சார ரயில்களில் முக கவசம் அணியாமல், நிறைய பேர் பயணம் செய்தனர்.

சென்னையில், கடற்கரை -- தாம்பரம் -- செங்கல்பட்டு -- திருமால்பூர் உட்பட, ஐந்து வழித்தடங்களில், தினமும், 660 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.கூட்டம் அதிகம் உள்ள, காலை, 7:00 மணிமுதல், 9:30 மணி வரையும், மாலை, 4:30 மணியில் இருந்து, இரவு, 7:00 மணி வரையும், பொது பயணியர் பயணம் செய்ய அனுமதி இல்லை.

நேற்று பலத்த மழை பெய்ததாலும், கிண்டி --ஆயிரம் விளக்கு இடையே, சாலை போக்குவரத்து ஸ்தம்பித்தது.தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் ஏரியாவில் இருந்து, அலுவலகம் செல்பவர்களும், பொது பயணியரும், ரயில் பயணத்தை நாடியதால், தாம்பரம் -- கடற்கரை இடையே, மின்சார ரயில்களில், காலை, மாலை வேளைகளில் பயணியர் கூட்டம் அதிகம் இருந்தது.

சமூக இடைவெளியும் பின்பற்றப்படவில்லை. நிறைய பயணியர், முக கவசம் அணியாமல் பயணம் செய்தனர்.காலை, மாலை கூட்டம் அதிகம் உள்ள நேரத்திலாவது, நிலையத்தின் நடை மேம்பால நுழைவு வாயில் பகுதியில் டிக்கெட் பரிசோதகர்கள் நின்று, முக கவசம் அணியாதவர்களை ரயிலில் செல்ல அனுமதிக்காமல் தடுக்க வேண்டும்.

மழையால், மெட்ரோ ரயிலில், காலை, மாலை வேளைகளில், நேற்று வழக்கத்தை விட பயணியர் கூட்டம் அதிகம் இருந்தது. சைதாப்பேட்டை -- சென்ட்ரல், திருமங்கலம் -- எழும்பூர் இடையே, ரயில்களில் அமர்வதற்கு இடமின்றி, பயணியர் நின்றபடி பயணம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X