மடத்துக்குளம்:மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், தொழிலாளர்களுக்கு ஆறு மாதமாக சம்பளம் வழங்கவில்லை. இது குறித்து, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடந்த, 1960 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 400க்கும் மேற்பட்ட பணியாளர்களும் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக தொழிலாளர்களுக்கும், அலுவலக ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்குவதில் இழுபறி ஏற்பட்டு வருகிறது.இதுகுறித்து, தொழிலாளர்கள் அரசுக்கு அனுப்பியுள்ள மனு: கடந்த ஆண்டு அரவை தொடங்கும் போதே, பல மாதம் சம்பளம் நிலுவையாக இருந்தது. இருப்பினும் ஆலையை இயக்க வேண்டும் என்ற நோக்கில், 64 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்து, 54 ஆயிரம் டன் சர்க்கரை உற்பத்தி செய்து கொடுத்தோம்.ஆனாலும், இன்று வரை எங்களுக்கு முழுமையான சம்பளம் வழங்கப்படவில்லை. தற்போது, ஆறு மாதம் சம்பளம் நிலுவையாக உள்ளது. இதனால் மிகவும் சிரமப்படுகிறோம். குடும்பத்தின் அடிப்படைத்தேவையைக்கூட பூர்த்தி செய்ய முடியாமல், பொருளாதார நெருக்கடியில் தவிக்கிறோம். எங்கள் நிலை உணர்ந்து, தற்போது வரை நிலுவையாக உள்ள சம்பளத்தை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE