உடுமலை:உடுமலை படமனை கலைஞர்கள் சங்கம் கூட்டம் நடந்தது.ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் தலைமை வகித்தார். இதில், புகைப்பட கலைஞர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். அரசு அலுவலகங்களில், வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆவணங்களுக்கு, போட்டோ கிராபர்களை அழைத்து படம் எடுக்காமல், அதிகாரிகளே எடுத்து, போலி பில் எழுதி நிதி முறைகேடு செய்வதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, ரெட்டியார் பட்டி பகுதி சித்தர்கள் அருள் குடில் பகுதியில், இச்சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE