பொது செய்தி

தமிழ்நாடு

திருச்செந்துார் ரயில் இயக்க 'அழுத்தம்'

Added : ஜன 06, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி வழித்தடத்தில், திருச்செந்துார் ரயிலை உடனே இயக்க வேண்டும் என, பயணிகள் நலச்சங்கம் அழுத்தம் கொடுத்துள்ளது.பொள்ளாச்சி ரயில்பயணிகள் நலச்சங்கத்தினர், தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ், பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம், கோவை எம்.பி., நடராஜன், பொள்ளாச்சி எம்.எல்.ஏ.,வும், சட்டசபை துணை சபாநாயகருமான ஜெயராமன் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

பொள்ளாச்சி:பொள்ளாச்சி வழித்தடத்தில், திருச்செந்துார் ரயிலை உடனே இயக்க வேண்டும் என, பயணிகள் நலச்சங்கம் அழுத்தம் கொடுத்துள்ளது.பொள்ளாச்சி ரயில்பயணிகள் நலச்சங்கத்தினர், தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ், பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம், கோவை எம்.பி., நடராஜன், பொள்ளாச்சி எம்.எல்.ஏ.,வும், சட்டசபை துணை சபாநாயகருமான ஜெயராமன் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளனர். கடிதத்தில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி வழித்தடத்தில் பாலக்காடு - திருச்செந்துார் இடையே, பயணிகள் ரயில் இயங்கியது. இந்த ரயில், தென்மாவட்ட மக்களுக்கும், திருச்செந்துார், பழநி ஆகிய ஆன்மிக தலங்களுக்கு செல்லும் பக்தர்களுக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. இந்நிலையில், கொரோனா பரவலால் ரயில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.சில மாதங்களுக்கு முன், அந்த ரயில் நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது. இது குறித்து கேட்ட போது, குறிப்பிட்ட பயணிகள் ரயில், எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.திருச்செந்துார் ரயிலை, எக்ஸ்பிரஸ் அல்லது பயணியர் ரயிலாகவோ உடனடியாக இயக்க வேண்டும். அந்த ரயில் நேரத்தை அனுசரித்து, மேட்டுப்பாளையம் அல்லது கோவையில் இருந்து, பொள்ளாச்சிக்கு இணைப்பு ரயில் இயக்க வேண்டும்.அதே போல், 650க்கும் மேற்பட்டவர்கள், 'சீசன் டிக்கெட்' எடுத்து பயணித்த பொள்ளாச்சி - கோவை ரயிலையும் உடனடியாக இயக்க வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில்,பயணிகள் சங்கத்தினர் பல தரப்புக்கும் அழுத்தம் அளித்துள்ளதால், ரயில்களை இயக்க மக்கள் பிரதிநிதிகள், ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என, சங்க நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X