தமிழ்நாடு

நீரில்லாமல் காய்ந்து கிடக்கும் குட்டைகளுக்கு உயிர் கொடுங்க...! பவானி ஆற்றிலிருந்து நீர் எடுத்து வர கோரிக்கை

Updated : ஜன 06, 2021 | Added : ஜன 06, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:காவிலிபாளையம் திட்டத்தில், வறண்டு கிடக்கும் குளம்,குட்டைகளுக்கு நீர் நிரப்ப, பவானி ஆற்றிலிருந்து குழாய்கள் வாயிலாக, நீர் பம்ப்பிங் செய்ய வேண்டும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.காரமடை ஒன்றியத்தில், 17 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளில் ஏராளமான தடுப்பணைகள், சிறிய, பெரிய குட்டைகள், குளங்கள் உள்ளன. கடந்த மாதம் தொடர்ச்சியாக சில நாட்கள் பெய்த மழையால், 13
நீரில்லாமல் காய்ந்து கிடக்கும் குட்டைகளுக்கு உயிர் கொடுங்க...! பவானி ஆற்றிலிருந்து நீர் எடுத்து வர கோரிக்கை

மேட்டுப்பாளையம்:காவிலிபாளையம் திட்டத்தில், வறண்டு கிடக்கும் குளம்,குட்டைகளுக்கு நீர் நிரப்ப, பவானி ஆற்றிலிருந்து குழாய்கள் வாயிலாக, நீர் பம்ப்பிங் செய்ய வேண்டும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
காரமடை ஒன்றியத்தில், 17 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளில் ஏராளமான தடுப்பணைகள், சிறிய, பெரிய குட்டைகள், குளங்கள் உள்ளன. கடந்த மாதம் தொடர்ச்சியாக சில நாட்கள் பெய்த மழையால், 13 ஊராட்சிகளில் உள்ள குளங்கள், குட்டைகள், தடுப்பணைகளில் நீர் நிறைந்து, இப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இங்குள்ள விவசாய கிணறுகள், போர்வெல்களில் நீரூற்று அதிகரித்துள்ளன.
பயிர்களுக்கு தேவையான நீர், கிணறுகளில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஆனால், இரும்பறை, சின்னகள்ளிபட்டி, மூடுதுறை, இலுப்பநத்தம் ஆகிய நான்கு ஊராட்சிகளில் உள்ள தடுப்பணைகள், குட்டைகளில் நீர் இல்லை. அதிலும் இரும்பறை ஊராட்சிக்கு உட்பட்ட, பெத்திகுட்டையில் உள்ள குட்டை, நீர் இல்லாமல் காய்ந்துள்ளது. இந்த நான்கு ஊராட்சிகள், பவானிசாகர் அணைக்கு அருகே இருந்தும், எவ்வித பாசன வசதி இல்லை. அதனால் இப்பகுதிகள் வறட்சியானதாக உள்ளதால், கிணற்று நீரை மட்டுமே நம்பி, விவசாயம் செய்கின்றனர்.
திறந்தவெளி கிணறுகளில் நீரூற்று அதிகளவில் இல்லாததால், இப்பகுதி விவசாயிகள், 500ல் இருந்து, 900 அடி வரை போர்வெல் அமைத்து, அதிலிருந்து நீர் எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர். வறட்சி காலங்களில் இதிலும் நீர் குறைவதால், கால்நடைகளுக்கு குடிப்பதற்கு கூட பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே, பவானி ஆற்றிலிருந்து, இந்த ஊராட்சிகளில் உள்ள குட்டைகளுக்கும், தடுப்பணைகளுக்கும் தண்ணீர் நிரப்ப வேண்டும் என, பா.ஜ., சார்பில் அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
பாதையில் இடையூறு கோவை பா.ஜ., மாவட்ட பொது செயலாளர் சக்திவேல் கூறியதாவது:ஓதிமலையில் இருந்து வரும் மழைநீரையும், பெத்திக்குட்டை வடக்குப் பகுதியில் இருந்து வரும் மழைநீரையும் தேக்கி வைக்க, பெத்திக்குடையில் ஐந்து ஏக்கர் பரப்பில், 30 அடி ஆழத்துக்கு பெரியகுட்டை அமைக்கப்பட்டுள்ளது. இதில் நீர் தேங்கினால், ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள, கிணறுகளுக்கு நீரூற்று கிடைக்கும்.
கடந்தாண்டு பெய்த கனமழையில், குட்டையில் ஓரளவு நீர் தேங்கியிருந்தது. இதனால், சுற்றுப்பகுதி விவசாய கிணறுகளுக்கு, மூன்று மாத காலத்துக்கு நீரூற்று கிடைத்தது. தற்போது ஓதிமலை பகுதியிலிருந்து வரும் மழைநீர் தடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள நிலத்தின் உரிமையாளர்கள் தடுத்து பயன்படுத்துவதால், குட்டைக்கு மழை நீர் வருவது தடைபட்டது.சில மாதங்களுக்கு முன், மேட்டுப்பாளையம் பகுதியில் கனமழை பெய்தது. ஆனால் இப்பகுதியில் மழை போதியளவு பெய்யவில்லை.
காரமடை மேற்கு பகுதி மற்றும் மத்திய பகுதியில் உள்ள ஊராட்சிகளில் பெய்த மழையால், தடுப்பணைகள், குளம், குட்டைகளில் நீர் நிறைந்துள்ளது. ஆனால் சின்னகள்ளிபட்டி, மூடுதுறை, இரும்பறை, இலுப்பநத்தம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள தடுப்பணைகளில் நீர் இல்லாமல் உள்ளது.நீருற்று கிடைக்கும்சிறுமுகை அடுத்த மூளையூரில் இருந்து, சிட்டேபாளையம் வரை பூமிக்குள், விஸ்கோஸ் கழிவுநீர் குழாய் உள்ளது.
சிட்டேபாளையத்தில் இருந்து, ஒரு கி.மீ.,ல் பெத்திக்குட்டை குட்டை உள்ளது. இந்த ஒரு கி.மீ.,க்கு மட்டும் குழாய் பதித்து, சிறுமுகை மூளையூரில், பவானி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து, குழாய் வழியாக பம்ப்பிங் செய்து, குட்டையில் நீர் நிரப்ப வேண்டும். தண்ணீர் தேங்கி நிற்கும் போது, சுற்றுப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகளுக்கு, நீரூற்று நன்கு கிடைக்கும். குட்டை நிரம்பி வெளியேறும் தண்ணீர், சம்பரவள்ளி, அம்மன்புதுாரில் கட்டியுள்ள தடுப்பணைகளை நிரப்பும்.
மேலும், ஏற்கனவே காவிலிபாளையம் திட்டம் குறித்து, விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அதனால், ஆற்றில் இருந்து நீர் பம்ப்பிங் செய்யும் போது, காவிலிபாளையம் வரை, ஊராட்சிகளில் அமைத்துள்ள குளம், குட்டைகள், தடுப்பணைகளில் நீர் நிரப்பினால், ஆயிரக்கணக்கான விவசாய கிணறுகளுக்கு, ஆண்டு முழுவதும் நீரூற்று கிடைக்கும். எனவே அரசு போர்க்கால அடிப்படையில், பவானி ஆற்றிலிருந்து நீரை பம்ப்பிங் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு பொது செயலாளர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X