பொது செய்தி

தமிழ்நாடு

நிலுவையில் இருக்கும் ஆறு மாத சம்பளம்!

Added : ஜன 06, 2021
Share
Advertisement
அன்னூர்:உரிய பணிகள் மேற்கொண்டும், கடந்த ஆறு மாதங்களாக சம்பளம் கிடைக்காமல், துாய்மைப் பணியாளர்கள் தவிக்கின்றனர்.அன்னுார் ஒன்றியத்தில், 75 துவக்க, 16 நடுநிலை, மூன்று உயர்நிலை, ஆறு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. பள்ளிகளில், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளிகளில், துாய்மைப் பணி மேற்கொள்ள, பகுதி நேர பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு மாத சம்பளமாக,

அன்னூர்:உரிய பணிகள் மேற்கொண்டும், கடந்த ஆறு மாதங்களாக சம்பளம் கிடைக்காமல், துாய்மைப் பணியாளர்கள் தவிக்கின்றனர்.அன்னுார் ஒன்றியத்தில், 75 துவக்க, 16 நடுநிலை, மூன்று உயர்நிலை, ஆறு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. பள்ளிகளில், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளிகளில், துாய்மைப் பணி மேற்கொள்ள, பகுதி நேர பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு மாத சம்பளமாக, துவக்கப் பள்ளிகளில், ஆயிரம் ரூபாயும், நடுநிலைப்பள்ளிகளில், 1,500 ரூபாயும், உயர்நிலைப் பள்ளிகளில், 2,000 ரூபாயும் வழங்கப்படுகிறது.இத்துடன், துாய்மை பொருட்கள் வாங்க, மாதம், 500 ரூபாய் வழங்கப்படுகிறது. கொரோனா காரணமாக நான்கு மாதங்கள் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தன. இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களாக, பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வந்து, பல்வேறு பணிகளில் ஈடுபடுகின்றனர். மேலும் முதியோர் கல்வி மையமும் பள்ளிகளில் செயல்படுகிறது. இந்நிலையில், பள்ளிகளில், 6 மாதங்களாக துாய்மைப் பணி மேற்கொண்டும், துாய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.இதுகுறித்து, அவர்கள் கூறுகையில், 'மிகக் குறைந்த சம்பளத்தில் வேலை செய்து வருகிறோம். அந்த சம்பளமும், ஆறு மாதங்களாக எங்களுக்கு வழங்கப்படவில்லை. சில பள்ளிகளில், தலைமை ஆசிரியர்கள் தங்கள் சொந்தப் பணத்திலிருந்து சம்பளம் வழங்கியுள்ளனர்.எனினும், இது நிரந்தரமானதல்ல. அரசு உடனடியாக எங்களுடைய நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும். மேலும் பணிபுரியும் நாள் ஒன்றுக்கு, 100 ரூபாய் சம்பளம் நிர்ணயித்து வழங்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X