பொள்ளாச்சி:பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சி.பி.ஐ., துறையினர் மேலும் மூவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த, 2019 ல் இளம்பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்து வீடியோ எடுத்து பணம் பறித்தது குறித்து பெண் ஒருவர் பொள்ளாச்சிகிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.இவ்வழக்கில் தொடர்புடைய சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் மேலும், மூவரை கோவை வந்த சி.பி.ஐ., போலீசார் நேற்று பிடித்து ரகசிய இடத்தில் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE