சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலையில் சென்றவர்கள் மீது கார் மோதல்:4 வயது சிறுவன் உட்பட இருவர் பலி

Added : ஜன 06, 2021
Share
Advertisement
கோவை:சாலையில் நடந்து சென்றவர்கள் மீது அதிவேகமாக சென்ற கார் மோதியதில், நான்கு வயது சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்தனர்.கோவை இருகூரை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். நேற்று இவர் தனது மனைவியை சிங்காநல்லுாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தார். மனைவியை மருத்துவமனையில் சேர்த்த பின், பாலசுப்ரமணியம் மற்றும் அவரது பேரன் ஆதவன்,4, ஆகிய இருவரும்

கோவை:சாலையில் நடந்து சென்றவர்கள் மீது அதிவேகமாக சென்ற கார் மோதியதில், நான்கு வயது சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்தனர்.கோவை இருகூரை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். நேற்று இவர் தனது மனைவியை சிங்காநல்லுாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தார். மனைவியை மருத்துவமனையில் சேர்த்த பின், பாலசுப்ரமணியம் மற்றும் அவரது பேரன் ஆதவன்,4, ஆகிய இருவரும் மருத்துவமனையின் எதிர்புறம் இருந்த வங்கிக்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தனர்.அப்போது, கண்ணம்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி வேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து அவ்வழியாக நடந்து சென்றவர்கள் மீது மோதியது. இதில், ஆதவன் மற்றும் ஒண்டிபுதுாரை சேர்ந்த சத்யராஜ், 20, சம்பவ இடத்திலேயே பலியாகினர். பாலசுப்ரமணியம் படுகாயமடைந்தார்.மேலும் கார், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இரு பைக்குகள் மீது மோதி நின்றது. இதையடுத்து, அருகிலிருந்தவர்கள் பாலசுப்ரமணியத்தை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் கண்ணம்பாளையத்தை சேர்ந்த ரமேஷ், 42, என்பவரிடம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X