மேற்கு வங்கத்தில் அரசியல் கொலையா? உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு மறுப்பு| Dinamalar

மேற்கு வங்கத்தில் அரசியல் கொலையா? உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு மறுப்பு

Added : ஜன 06, 2021 | கருத்துகள் (4)
Share
புதுடில்லி : 'மேற்கு வங்க, பா.ஜ., பிரமுகரும், முன்னாள், எம்.எல்.ஏ.,வுமான தேபேந்திர நாத் ராய் மரணம், அரசியல் கொலை என்ற குற்றச்சாட்டை, மேற்கு வங்க அரசு, உச்ச நீதிமன்றத்தில் மறுத்துள்ளது.மேற்கு வங்கத்தில், வடக்கு தினாஜ்புர் மாவட்டத்தைச் சேர்ந்த, பா.ஜ., பிரமுகர் தேபேந்திர நாத் ராய் உடல், கடந்தாண்டு, அவரது வீட்டில், துாக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது. இவர் ஏற்கனவே,
மேற்கு வங்கம், அரசியல் கொலை, உச்ச நீதிமன்றம், மாநில அரசு, மறுப்பு

புதுடில்லி : 'மேற்கு வங்க, பா.ஜ., பிரமுகரும், முன்னாள், எம்.எல்.ஏ.,வுமான தேபேந்திர நாத் ராய் மரணம், அரசியல் கொலை என்ற குற்றச்சாட்டை, மேற்கு வங்க அரசு, உச்ச நீதிமன்றத்தில்
மறுத்துள்ளது.

மேற்கு வங்கத்தில், வடக்கு தினாஜ்புர் மாவட்டத்தைச் சேர்ந்த, பா.ஜ., பிரமுகர் தேபேந்திர நாத் ராய் உடல், கடந்தாண்டு, அவரது வீட்டில், துாக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது. இவர் ஏற்கனவே, மார்க்சிஸ்ட் கட்சியின், எம்.எல்.ஏ.,வாக இருந்துள்ளார்.'இது அரசியல் ரீதியில் நடத்தப்பட்ட கொலை. ராய் மரணம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


latest tamil news


இந்த வழக்கில், மேற்கு வங்க அரசு சார்பில், போலீஸ் துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:ராய் மரணம் தொடர்பாக, மாநில, சி.ஐ.டி., போலீசார் தீவிர விசாரணை நடத்தி, உரிய நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவருடைய மரணம், அரசியல் கொலை அல்ல. இதில் மாநில அரசு, அதிகாரிகள் உள்ளிட்ட, வேறு யாருக்கும் தொடர்பில்லை. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. விசாரணை, இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X