திருப்பூர்:திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (ஆர்.டி.ஓ.,) லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய ரெய்டில், கணக்கில் வராத, 2 லட்சத்து, 29 ஆயிரம் ரூபாய் சிக்கியது.
திருப்பூர் அடுத்த சிறுபூலுவப்பட்டி ரோட்டில், வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், லஞ்சம் பெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
லஞ்ச ஒழிப்பு துறை, டி.எஸ்.பி., தட்சிணாமூர்த்தி தலைமையிலான போலீசார், நேற்று மாலை, வடக்கு ஆர்.டி.ஓ.,அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு ஓட்டுனர் உரிமம், பதிவு சான்றிதழ் உரிமம் புதுப்பித்தல் போன்ற பணிகளுக்காக காத்திருந்தவர்களை வெளியே அனுப்பிய போலீசார், அலுவலர்கள், மற்றும் அலுவலக ஊழியர்களை உள்ளே வைத்து, கதவை பூட்டி, சோதனையில் ஈடுபட்டனர். இரவு, 10:00 மணி கடந்தும் சோதனை தொடர்ந்தது. இதில், கணக்கில் வராத, 2 லட்சத்து, 29 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE