திருப்பூர்:'கந்தபுராணத்தை கொச்சைப்படுத்திய தி.மு.க., வருத்தம் தெரிவிக்காவிட்டால், விளைவுகளை சந்திக்க நேரிடும்' என, ஹிந்து முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், கூறியதாவது:தைப்பூச திருவிழாவுக்கு, தமிழக அரசு பொது விடுமுறை அளித்துள்ளதை, ஹிந்து முன்னணி மனதார பாராட்டி வரவேற்கிறது. தமிழக முதல்வருக்கு நன்றி. ஹிந்து மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் தி.மு.க.,வினர், கந்தபுராணத்தையும் கொச்சைப்படுத்தி விட்டனர்.
இறைவன் மீது பாடியபாடல்களை திரித்து, தங்களது பிரசார பாடலாக மாற்றியுள்ளனர்; இது, கண்டனத்துக்குரியது.தேர்தல் நேரத்தில், ஹிந்து ஓட்டுக்களை கவரலாம் என்ற ஸ்டாலினின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது. கந்தபுராண பாடலை திரித்து உருவாக்கிய பிரசார பாடல் ஒளிபரப்பை தி.மு.க., நிறுத்த வேண்டும். அவர்கள் வருத்தம் தெரிவிக்கா விட்டால், விளைவுகளை சந்திக்க நேரிடும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE