மதுக்கரை:-கோவை அருகே, போக்குவரத்து சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத, 51 ஆயிரம் ரூபாய் சிக்கியது.
கேரளாவில் இருந்து, வாளையார் வழியாக, கோவை மாவட்டத்துக்குள் நுழையும் வாகனங்களை சோதனையிடும், போக்குவரத்து சோதனை சாவடி, எட்டிமடை அருகே உள்ளது. இங்கு பணிபுரிவோர், லஞ்சம் பெறுவதாக, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.டி.எஸ்.பி., கணேசன் தலைமையில், இன்ஸ்பெக்டர் சசிலேகா மற்றும் போலீசார், நேற்று மாலை சோதனையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடந்த சோதனையில், கணக்கில் வராத, 51 ஆயிரத்து, 80 ரூபாய் ரொக்கம் சிக்கியது.
பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் ராமலிங்கம், உதவியாளர் சீனிவாசன், அலுவலக உதவியாளர் பத்மா, வசூலில் உதவிய போக்குவரத்து துறை முன்னாள் ஊழியர் கோபாலகிருஷ்ணன் ஆகியோரிடம் விசாரித்தனர். தொடர்ந்து, இவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE