சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ. 23 லட்சம் மோசடி ஐ.ஜி.,யிடம் புகார்

Added : ஜன 06, 2021
Share
Advertisement
கோவை:மருத்துவ கல்லுாரியில், 'சீட்' வாங்கி தருவதாக, 23 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் மீது, மேற்கு மண்டல ஐ.ஜி., யிடம் புகார் அளிக்கப்பட்டது.திருப்பூர் மாவட்டம், பல்லடம், சிவசக்தி நகரை சேர்ந்த தனசெல்வன், மேற்கு மண்டல ஐ.ஜி., பெரியய்யாவிடம் நேற்று அளித்த புகார் மனு:எனது மகன், 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்றதால், மருத்துவ படிப்பில் சேர்வதற்கு முயற்சி செய்தோம். முருகன் என்பவர்

கோவை:மருத்துவ கல்லுாரியில், 'சீட்' வாங்கி தருவதாக, 23 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் மீது, மேற்கு மண்டல ஐ.ஜி., யிடம் புகார் அளிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம், சிவசக்தி நகரை சேர்ந்த தனசெல்வன், மேற்கு மண்டல ஐ.ஜி., பெரியய்யாவிடம் நேற்று அளித்த புகார் மனு:எனது மகன், 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்றதால், மருத்துவ படிப்பில் சேர்வதற்கு முயற்சி செய்தோம். முருகன் என்பவர் வாயிலாக, சலாவூதீன் என்பவர் பழக்கமானார்.அப்போது அவர், சுகாதார துறை அலுவலகத்தில், தனது தாயார் பணியாற்றுவதாகவும், செல்வாக்கை பயன்படுத்தி, மருத்துவ கல்லுாரியில் இடம் வாங்கி தருகிறேன் என்றும் தெரிவித்தார்.

முதல் கட்டமாக, 23.5 லட்சம் ரூபாய் கொடுத்தேன். ஆனால், மருத்துவ கல்லுாரியில் இடம் பெற்று தராமல் ஏமாற்றினார்.போலீசில் புகார் அளித்தபோது, இன்ஸ்பெக்டர் அவரை அழைத்து விசாரித்தார். அப்போது, 50 ஆயிரம் ரூபாய் திருப்பி கொடுத்து விட்டு, மீதி, 23 லட்சம் ரூபாய்க்கு, ஆறு காசோலை கொடுத்தார்.

அவரது வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் காசோலை திரும்பி வந்தது. அவரிடமிருந்து பணத்தை திருப்பி பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, புகாரில் கூறியுள்ளார்.புகாரை பெற்றுக்கொண்ட ஐ.ஜி., இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X