அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்:ஸ்டாலின் வளையக் கூடாது!

Updated : ஜன 06, 2021 | Added : ஜன 06, 2021 | கருத்துகள் (82)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:வி.ஹெச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:--சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு வருமுன், தி.மு.க., கூட்டணியில் உள்ள சின்னக் கட்சிகள், 'சீட்' பேரம் பேசுவதற்காக இப்போதே, 'உதார்' விட ஆரம்பித்துள்ளன.தி.மு.க., கூட்டணியில் உள்ள சின்ன கட்சிகளும், உதயசூரியன் சின்னத்தில்
DMK, Stalin, MK Stalin, திமுக, ஸ்டாலின்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


வி.ஹெச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:--சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு வருமுன், தி.மு.க., கூட்டணியில் உள்ள சின்னக் கட்சிகள், 'சீட்' பேரம் பேசுவதற்காக இப்போதே, 'உதார்' விட ஆரம்பித்துள்ளன.

தி.மு.க., கூட்டணியில் உள்ள சின்ன கட்சிகளும், உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட்டு வந்தன. இப்போது திடீரென, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, வி.சி., தலைவர் திருமாவளவன், ஐ.ஜே.கே., தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர், 'நாங்கள், எங்களின் கட்சி சின்னத்தில் தான் போட்டியிடுவோம்' என கொளுத்திப் போட்டுள்ளனர்.

அதுவும், ஐ.ஜே.கே., கட்சி கேட்கும், ஆறு தொகுதிகளையும், தி.மு.க., ஒதுக்க வேண்டுமாம்... மறுத்தால், 234 தொகுதிகளிலும், அக்கட்சித் தனித்து போட்டியிடுமாம். பாரம்பரியமிக்க, தமிழகத்தில் வலுவாக உள்ள, தி.மு.க.,வை, சின்ன சிறு கட்சிகள் எல்லாம் மிரட்டுகின்றன. தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'உதயசூரியன் சின்னத்தில் தான், கூட்டணிக் கட்சிகள் போட்டியிட வேண்டும்; சம்மதித்தால் மட்டும், கூட்டணிக்கு வாருங்கள்' என, திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்.


latest tamil news



தி.மு.க.,வால் தான், அக்கட்சிகள் வெற்றி பெற முடியும். தனித்து நின்றால், டிபாசிட் வாங்கவே திணறும் என்பது அனைவருக்கும் தெரியும். அக்கட்சிகளால், தி.மு.க.,வுக்கு கிடைக்கும் ஓட்டுக்கள் மிக சொற்பமே. அதனால், ஸ்டாலின் அதிரடியாக அறிவித்தால், அக்கட்சிகள் அமைதியாகிவிடும்.

தேசியக் கட்சியான காங்கிரஸ், 'கொடுக்கிற சீட்களை வாங்கிக் கொள்கிறோம்' என, பெருந்தன்மையுடன் தெரிவித்து விட்டது. கூட்டணிக் கட்சிகளுக்கு தேர்தல் நிதியும் கொடுத்து, அவர்கள் கட்சி சின்னத்தையும், தி.மு.க.,வே வளைந்து கொடுக்க வேண்டுமா? வலுவான உட்கட்சி கட்டமைப்பு, மக்கள் செல்வாக்கு இல்லாத சின்ன சின்ன கட்சிகளின் மிரட்டலுக்கு எல்லாம், ஸ்டாலின் வளைந்து கொடுக்கக் கூடாது.

Advertisement




வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-ஜன-202123:51:02 IST Report Abuse
சம்பத் குமார் I am traveling, bye.
Rate this:
Cancel
Sowdarpatti Rayarpadi Ramaswamy - Madurai,இந்தியா
06-ஜன-202121:37:35 IST Report Abuse
Sowdarpatti Rayarpadi Ramaswamy ஜெயலலிதா 234 தொகுதியிலும் இரட்டை இலை சின்னத்தை நிற்க வைத்தார் ,ஜெயித்தார் . அந்த தைரியம் மாதிரி சுடலை ஜொஸ்ப் கான்க்கு வராது
Rate this:
skandh - Chennai,இந்தியா
07-ஜன-202110:00:10 IST Report Abuse
skandhஆண்பிள்ளை சிங்கம் சுடலை செய்வார். இல்லை கூட்டணிக்கட்சிகளே செய்ய வாய்க்கும். இது திண்ணம். மறுபடியும் ஒருவித மக்கள் நலக்கூட்டணி உருவாகும்....
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
06-ஜன-202120:25:04 IST Report Abuse
bal அது என்ன காலர் அய்யா .....அந்த காலத்தில் சொல்வாங்க கழுதை காலர் என்று.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X