ஊட்டி:கோடநாடு வழக்கில் குறுக்கு விசாரணை, ஜன., 11ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு, ஊட்டி, செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.இவ்வழக்கில், அரசு தரப்பு சாட்சி விசாரணை முடிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வக்கீல் ஆனந்தன் குறுக்கு விசாரணைக்கு மனு தாக்கல் செய்தார். முக்கிய சாட்சிகளான, கோடநாடு எஸ்டேட்டில் பணிபுரிந்த பஞ்ச புஷ்பகர்ம, சுனில் தாபா, கிருஷ்ணதாபா ஆகியோர் குறுக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.
அதில், பஞ்ச புஷ்பகர்மா, சுனில் தாபா ஆகியோரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டு முடிக்கப்பட்டது. நேற்று நடந்த வழக்கு விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட சயான், மனோஜ் உட்பட, எட்டு பேர் ஆஜராகினர். மூன்றாவது நபரான கிருஷ்ணதாபாவிடம் நான்காவது முறையாக குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.வழக்கை நீதிபதி சஞ்சய் பாபா,
ஜன., 11ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE