யானை தாக்குதல் எதிரொலி: மின்வேலி அகற்ற ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

யானை தாக்குதல் எதிரொலி: மின்வேலி அகற்ற ஆய்வு

Added : ஜன 06, 2021
Share
பந்தலுார்:சேரம்பாடி வனச்சரகத்தில், யானை வழித்தடத்தில் உள்ள மின்வேலிகளை அகற்ற, வனத்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகேயுள்ள சேரம்பாடியில், கடந்த மாதத்தில் மட்டும், மூவர் யானை தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். இதனால், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், வனத்துறை, வருவாய் துறை அளவிலான ஆலோசனை

பந்தலுார்:சேரம்பாடி வனச்சரகத்தில், யானை வழித்தடத்தில் உள்ள மின்வேலிகளை அகற்ற, வனத்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகேயுள்ள சேரம்பாடியில், கடந்த மாதத்தில் மட்டும், மூவர் யானை தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். இதனால், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், வனத்துறை, வருவாய் துறை அளவிலான ஆலோசனை கூட்டம் பந்தலுாரில் நடந்தது.இதையடுத்து, யானைகள் நடமாட்டம் குறித்து, 'ட்ரோன்' கேமரா உதவியுடன் இரவிலும் கண்காணிப்பு பணியை துவங்கியுள்ளனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு, யானைகள் கூட்டமாக அப்பகுதியில் முகாமிட்டிருந்தன. இதனால், மக்கள் அச்சமடைந்தனர்.அதிகாரிகள் கூறுகையில், 'இப்பகுதியில், யானை வழித்தடங்களில் உள்ள தோட்டங்களில், மின் வேலிகள் உள்ளன. இதனால், யானை கூட்டம் தடுமாறி கிராமத்துக்குள் புகுந்து, மக்களை தாக்கி வருகின்றன. சோலார் மின்வேலிகளை அகற்ற ஆய்வு நடத்தி வருகிறோம்; விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X