பொது செய்தி

தமிழ்நாடு

700 கணினி ஆசிரியர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி

Added : ஜன 06, 2021
Share
Advertisement
கோவை:புதிதாக பணியில் சேர்ந்த, 700 கணினி ஆசிரியர்களுக்கான இரு வார கால, ஆன்லைன் பயிற்சி இன்று துவங்குகிறது.ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக, 700 பேர், கணினி ஆசிரியர்களாக பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். புதிதாக சேர்ந்த ஆசிரியர்களுக்கு, இருவார கால, ஆன்லைன் பயிற்சி இன்று (ஜன., 6) துவங்குகிறது.'ஆம்பிசாப்ட்' நிறுவன மூத்த கற்றல் அதிகாரி பாலமுருகன் கூறுகையில்,''உயர் கணினி

கோவை:புதிதாக பணியில் சேர்ந்த, 700 கணினி ஆசிரியர்களுக்கான இரு வார கால, ஆன்லைன் பயிற்சி இன்று துவங்குகிறது.

ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக, 700 பேர், கணினி ஆசிரியர்களாக பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். புதிதாக சேர்ந்த ஆசிரியர்களுக்கு, இருவார கால, ஆன்லைன் பயிற்சி இன்று (ஜன., 6) துவங்குகிறது.

'ஆம்பிசாப்ட்' நிறுவன மூத்த கற்றல் அதிகாரி பாலமுருகன் கூறுகையில்,''உயர் கணினி தொழில்நுட்பங்களில், 'பைதான் புரோகிராமிங்' பயன்படுத்தப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு, வலைதள உருவாக்கம், தகவல் தொகுப்பு உருவாக்கம் உள்ளிட்ட, தொழில் நுட்பங்கள் குறித்து, மாணவர்களுக்கு எளிதில் கற்பிக்கும் வகையில், ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. செய்முறை பயிற்சிகளும் அளிக்கப்படும். மாணவர்களிடம் செயல்வழியில் கணினி தொழில்நுட்பத்தை கொண்டு சேர்ப்பதே இப்பயிற்சியின் நோக்கம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X