மேட்டூர்:''தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அந்த மக்களுக்கு, மாற்றத்தை உருவாக்கும் கருவியாக இருப்பேன்,'' என, மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசினார்.
சேலம் மாவட்டம், மேட்டூர் சட்டசபை தொகுதி, மேச்சேரியில் அவர் பிரசாரம் செய்து பேசியதாவது:மேச்சேரி, ஆடுகள், தக்காளி, கைத்தறி நெசவுக்கு பிரபலமான ஊர். ஆனால், தக்காளி விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்க, நானும் கைத்தறி ஆடைகளை அணிவேன். காக்கும் தெய்வங்கள், கட்டப்பஞ்சாயத்து செய்வோர்களாக மாறி விட்டனர்.
மாண்புமிகு என்பதை, பெயருக்கு முன்னால் எழுதுபவர்களுக்கு, அதற்கான அருகதை இருக்க வேண்டும். தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அந்த மக்களுக்கு, மாற்றத்தை உருவாக்கும் கருவியாக இருப்பேன்.இவ்வாறு அவர் பேசினார்.ஓமலுாரில் கமல்ஹாசன் பேசியதாவது:செல்லும் இடமெல்லாம், மக்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
நாளை நமதே குரல், எங்கு சென்றாலும் ஒலிக்கிறது. கட்சி கூட்டங்களில், பெண்கள் பத்திரமாக, பாதுகாப்பாக நிற்கும் இடம் இது தான். கூட்டம் முடிந்தபின், கட்சி நிர்வாகிகள், குப்பையை அகற்றிச் செல்வர். அதுபோல், ஆட்சியும் சுத்தமாக இருக்கும் என, மக்கள் நம்புகின்றனர்.இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE