பொது செய்தி

இந்தியா

மருத்துவ ஆக்சிஜன் தயாரிப்புக்கு 'பிஎம்கேர்' நிதியில் ஒதுக்கீடு

Updated : ஜன 06, 2021 | Added : ஜன 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள, 'பிஎம்கேர்' என்ற நிதித் தொகுப்பில் இருந்து, 162 இடங்களில் மருத்துவ ஆக்சிஜன் தயாரிப்பு நிலையங்கள் அமைக்க, 201.58 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்தபோது, அவசர மருத்துவ உதவி திட்டங்களுக்கு உதவுவதற்காக, 'பிஎம்கேர்' என்ற நிதித் தொகுப்பு உருவாக்கப்பட்டது. பிரதமர் தலைமையிலான இந்த
PM CARES Fund, Allocates, Medical Oxygen Generation Plants

புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள, 'பிஎம்கேர்' என்ற நிதித் தொகுப்பில் இருந்து, 162 இடங்களில் மருத்துவ ஆக்சிஜன் தயாரிப்பு நிலையங்கள் அமைக்க, 201.58 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்தபோது, அவசர மருத்துவ உதவி திட்டங்களுக்கு உதவுவதற்காக, 'பிஎம்கேர்' என்ற நிதித் தொகுப்பு உருவாக்கப்பட்டது. பிரதமர் தலைமையிலான இந்த நிதி அறக்கட்டளையில், ராணுவ, உள்துறை மற்றும் நிதி அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த நிதி தொடர்பாக பல சர்ச்சைகள், சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.


latest tamil news



இந்நிலையில், பிரதமர் அலுவலகம், நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டின், 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 162 இடங்களில், மருத்துவ ஆக்சிஜன் தயாரிப்பு நிலையங்கள் அமைக்க, பிஎம்கேர் நிதியில் இருந்து, 201.58 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வசதி அமைய உள்ள, அரசு மருத்துவமனைகள் உள்ளிட்டவை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழுள்ள, மத்திய மருந்து விநியோக அமைப்பின் மூலம், இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.கொரோனா வைரஸ் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளோருக்கு, ஆக்சிஜன் தேவைப்படுகிறது. அதுபோல, பல தீவிர நோயாளிகளுக்கும், ஆக்சிஜன் தேவை அதிகமாக உள்ளது. தடையில்லாமல், மருத்துவ ஆக்சிஜன் கிடைக்கும் வகையில், இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-ஜன-202107:01:14 IST Report Abuse
ஆப்பு பி.எம் கேர்ஸுக்கு எங்கேருந்து நிதி வந்ததுன்னா சொல்ல மாட்டாங்க. செலவுக்கு மட்டும் விலாவாரியா கணக்கு காட்டுறாங்க... ரொம்ப நேர்மையாளர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X