பொது செய்தி

இந்தியா

என்.ஆர்.ஐ.,க்களுக்கு தபால் ஓட்டு; வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல்

Updated : ஜன 06, 2021 | Added : ஜன 06, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி : என்.ஆர்.ஐ., எனப்படும், வெளிநாடு வாழ் இந்தியர்கள், தேர்தல்களில், மின்னணு முறையில் தபால் ஓட்டுகள் பதிவு செய்ய அனுமதிக்கும், தேர்தல் கமிஷனின் பரிந்துரைக்கு, வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.நம் நாட்டில் நடக்கும் தேர்தல்களின்போது, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வெளிநாடுகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், தபால்
NRI, Postal Vote, EC

புதுடில்லி : என்.ஆர்.ஐ., எனப்படும், வெளிநாடு வாழ் இந்தியர்கள், தேர்தல்களில், மின்னணு முறையில் தபால் ஓட்டுகள் பதிவு செய்ய அனுமதிக்கும், தேர்தல் கமிஷனின் பரிந்துரைக்கு, வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

நம் நாட்டில் நடக்கும் தேர்தல்களின்போது, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வெளிநாடுகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், தபால் ஓட்டுகள் அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


latest tamil news


அதேபோல், 'வெளிநாடுகளில் வேலை பார்க்கும், படிக்கும் மாணவர்கள், தங்கள் மாநிலத்தில் நடக்கும் தேர்தலில், மின்னணு முறை வசதியை பயன்படுத்தி, தபால் ஓட்டுகள் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும். அதற்கு தேவையான வசதிகள் உள்ளன' என, தேர்தல் கமிஷன், கடந்த, நவ., 27ல், சட்டத் துறை செயலருக்கு கடிதம் எழுதியிருந்தது.

இதை பரிசீலித்த வெளியுறவு அமைச்சகம், தேர்தல் கமிஷனின் இந்த பரிந்துரையை ஏற்றுள்ளது. இது தொடர்பாக, ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கும்படி, தேர்தல் கமிஷனுக்கு, வெளியுறவு அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
06-ஜன-202112:33:25 IST Report Abuse
pattikkaattaan சீக்கிரம் நடைமுறைக்கு கொண்டுவாருங்கள்
Rate this:
Cancel
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
06-ஜன-202107:47:41 IST Report Abuse
Sankar Ramu நல்லது மிகவும் தேவையான ஒன்று.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X