பொது செய்தி

இந்தியா

கங்குலிக்கு ஏற்பட்ட மாரடைப்பால் எண்ணெய் விளம்பரம் நிறுத்தம்

Updated : ஜன 06, 2021 | Added : ஜன 06, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
புதுடில்லி: பிரபல கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலிக்கு, லேசான மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, அதானி வில்மார் நிறுவனம், அவர் தோன்றும் பார்ச்சூன் எண்ணெய் விளம்பரங்களை வெளியிடுவதை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு, கடந்த, 2ம் தேதியன்று லேசான மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர், கோல்கட்டாவில் உள்ள ஒரு
Ganguly, Adani, fortune

புதுடில்லி: பிரபல கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலிக்கு, லேசான மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, அதானி வில்மார் நிறுவனம், அவர் தோன்றும் பார்ச்சூன் எண்ணெய் விளம்பரங்களை வெளியிடுவதை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு, கடந்த, 2ம் தேதியன்று லேசான மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர், கோல்கட்டாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. விரைவில் அவர் வீடு திரும்ப இருக்கிறார்.

இந்நிலையில், அவர் தோன்றிய, பார்ச்சூன் ரைஸ் பிரான் சமையல் எண்ணெய் விளம்பரங்கள், சமூக ஊடகங்களில் அதிகம் விமர்சனத்துக்கு உள்ளாயின.பார்ச்சூன் எண்ணெய் இதயத்திற்கு ஆரோக்கியமானது என்று கூறுவதாக அமைந்திருக்கும் அந்த விளம்பரத்தில், கங்குலி நடித்திருந்தார். இதுவே, சமூக ஊடகங்களின் விமர்சனத்துக்கு காரணமாக அமைந்தது.


latest tamil newsபார்ச்சூன் ரைஸ் பிரான் சமையல் எண்ணெய்க்கான விளம்பர துாதராக, கடந்த ஆண்டு ஜனவரியில், கங்குலி நியமிக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக அவரை வைத்து விளம்பரங்கள் எடுக்கப்பட்டு, வெளியிடப்பட்டு வந்தன. தற்போது விளம்பரங்கள் நிறுத்தப் பட்ட நிலையில், அதற்கு ஆதரவாகவும், நிறுவனத்தின் நடவடிக்கையை விமர்சித்தும் சமூக ஊடகங்களில் கருத்துகள் வேகமாக பரவி வருகின்றன.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RADE - loch ness,யுனைடெட் கிங்டம்
11-ஜன-202115:09:43 IST Report Abuse
RADE விளம்பர நிறுவனம் மாடல் ஆகா தேர்ந்து எடுக்கும் நபரை ஒரு உண்மையான ஹெழ்த் டெஸ்ட் எடுத்து மற்றும் அவர் சாப்பிடும் உணவு 3 மாதத்திற்கு சமைப்பதற்கு ஆனா எண்ணெய் குடுத்து திரும்பவும் ஒரு டெஸ்ட் எடுத்து அதுவே விளம்பரமாக செய்து இருக்கலாம். நடிப்பவர்களுக்கு வெறும் காசாக வாங்காமல் கொஞ்சம் சாமானிய மக்களை பற்றியும் யோசித்து இருக்கலாம்.
Rate this:
Cancel
ponssasi - chennai,இந்தியா
11-ஜன-202113:01:48 IST Report Abuse
ponssasi சில மாதங்களுக்கு முன்பு சென்னை மவுண்ட் ரோடில் பாமாயில் ஏற்றிவந்த லாரி விபத்துக்குளாகி பாமாயில் சாலையில் ஓடியது. அது துறைமுகத்தில் இருந்து ஒரு பிரபல என்னை நிறுவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது தெரியவந்தது. என்னை நிறுவனத்துக்கு பாமாயில் ஏன் கொண்டுசெல்லப்படுகிறது? அணைத்து என்னைகளிலும் பாமாயில் கலக்கப்படுகிறதா? சுகாதாரத்துறை என்ன செய்கிறது. அணைத்து தவறுகளுக்கும் அரசு, அதிகாரிகளின் ஆசி உண்டு. விளம்பரம் பார்த்து ஏமாறும் மக்கள்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
10-ஜன-202103:48:06 IST Report Abuse
J.V. Iyer ஐயோ பாவம். இதே கதைதான் அமிதாப்புக்கு. குளிர் பாணம் அவர் உடலை பதம் பார்த்துவிட்டது. எல்லாம் பணம் செய்யும் வேலை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X