அலங்காநல்லுார் : அலங்காநல்லுாரில் அரசு பள்ளி 11ம் வகுப்பு மாணவி கெங்கச்சி தான் வளர்க்கும் அரியமலை காளைக்குஜல்லிக்கட்டு போட்டிக்காக நடை, மண்குத்துதல்பயிற்சி அளிக்கிறார்.
இப்பகுதி கங்கை மகள் வெள்ளை கெங்கச்சி 16. ஆறு ஆண்டுகளாக இவர் வளர்த்த கன்றுகுட்டி, தற்போது காளையாக களம் கண்டு வருகிறது. அலங்காநல்லுார் வாடிவாசலில் தொடர்ந்து 2 ஆண்டுகளாக இக்காளை வெற்றிபெற்று பெருமை சேர்த்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் பங்கேற்ற 20 போட்டிகளிலும் பரிசுகளை வென்றுள்ளது.மாணவி கூறியதாவது: முதல் முறையாக ஜல்லிக்கட்டு காளை வாங்கி அரியமலை சுவாமி பெயரில் வளர்த்து வருகிறோம். கடலை மிட்டாய் தருவேன். தாமதமானால் சத்தம் எழுப்பி அழைப்பான். எங்கள் வீட்டில் என்னைமட்டுமே நெருங்க விடுவான்,என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE