பொது செய்தி

தமிழ்நாடு

ரசிகர்கள் போராட்டம்: ரஜினி மன்றம் எச்சரிக்கை

Updated : ஜன 06, 2021 | Added : ஜன 06, 2021 | கருத்துகள் (68)
Share
Advertisement
சென்னை: 'ரஜினியின் விருப்பத்திற்கு மாறாக, ஆர்ப்பாட்டம் நடத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூறிஉள்ளனர்.ரஜினி முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டி, அதிருப்தி நிர்வாகிகள் சிலர் ரகசிய கூட்டம் நடத்திஉள்ளனர். அதில், 'ரஜினி அரசியலுக்கு வர வேண்டும்' என, அழைப்பு விடுத்து, வரும், 10ம் தேதி, சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த
Rajini,Rajinikanth,politics,ரஜினி,ரஜினிகாந்த்

சென்னை: 'ரஜினியின் விருப்பத்திற்கு மாறாக, ஆர்ப்பாட்டம் நடத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூறிஉள்ளனர்.

ரஜினி முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டி, அதிருப்தி நிர்வாகிகள் சிலர் ரகசிய கூட்டம் நடத்திஉள்ளனர். அதில், 'ரஜினி அரசியலுக்கு வர வேண்டும்' என, அழைப்பு விடுத்து, வரும், 10ம் தேதி, சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதையடுத்து, வடசென்னை மாவட்ட செயலர் சந்தானம் விடுத்துள்ள அறிக்கையில், 'ரஜினியின் அரசியல் நிலைப்பாட்டை எதிர்த்து, 10ம் தேதி, வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த சிலர் திட்டமிட்டுள்ளனர். 'அதில், நம் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் யாரும் பங்கேற்க வேண்டாம். மீறுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' எனக் கூறியுள்ளார்.


latest tamil news


தென்சென்னை மேற்கு மாவட்ட செயலர் ரவிச்சந்திரன் அறிக்கை:உடல் நலம் கருதி, தேர்தல் அரசியலுக்கு தற்பொழுது வரவில்லை என்ற அறிக்கையை, ரஜினி வெளியிட்டிருந்தார். அதை திரும்ப பெற செய்யும் நோக்கத்தில், மன்ற நிர்வாகிகள், வரும், 10ம் தேதி, அறவழிப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

அந்த போராட்டத்திற்கு, நம் தலைமை மன்றம் அனுமதி அளிக்கவில்லை.எனவே அனைவரும், ரஜினியின் முடிவுக்கு கட்டுபட்டு, அடுத்த அறிவிப்பு வரும் வரை,பொறுமை காக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
06-ஜன-202120:36:37 IST Report Abuse
Bhaskaran தன சொத்துக்களை கர்நாடகத்திலும் மராட்டியத்திழும் முதலீடு செய்த தானும் தமிழனு சொல்லி கொள்ளும் புனிதர் இவருக்காக தீக்குளிக தயாராக இருக்கும் ரசிகப்பெருமக்களை என்ன சொல்வது
Rate this:
Cancel
06-ஜன-202117:48:37 IST Report Abuse
Indian Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) மாற்றமும் அதிசயமும் அட்புதமும் நிகழும் பொறுத்திருந்து பாருங்கள்.
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
06-ஜன-202117:24:02 IST Report Abuse
அறவோன் கணக்குப்பிள்ளை, துருவியோட வேலையா இருக்குமோ 🤔
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X