திருமங்கலம் : ''கிராம சபை கூட்டம் பெயரில் எதிர்கட்சிதலைவர் ஸ்டாலின் போலி விளம்பரம் தேடுகிறார். துணை முதல்வராக அவர் இருந்த போது ஏதாவது ஒரு கிராம சபைக்குசென்றதுண்டா,'' என,திருமங்கலம் மதிப்பனுாரில் பொங்கல் பரிசுத்தொகுப்புகளை வழங்கி அமைச்சர் உதயகுமார் பேசினார்.
அவர் பேசியதாவது: பொங்கல் பண்டிகையை அனைவரும் மனநிறைவுடன் கொண்டாட மறைந்த முதல்வர் ஜெயலலிதா பொங்கல் பரிசு திட்டத்தை கொண்டு வந்தார். ரூ.100ல் துவங்கப்பட்டது. ரூ.ஆயிரமாக உயர்ந்து, தற்போது ரூ. 2500 வழங்கப்படுகிறது.தி.மு.க., ஆட்சியில் நிலம் இல்லாதவர்களுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என அறிவித்தனர். நான் வருவாய்த்துறை அமைச்சராக உள்ளேன். தமிழகத்தில் எவ்வளவு அரசு புறம்போக்குஉள்ளது என தெரியும்.ஆட்சியை பிடிக்க இல்லாத இடத்தை கொடுப்பதாக தி.மு.க.,வினர் கூறினர்.
ஆனால் அதை கொடுக்கவில்லை, என்றார்.டி.ஆர்.ஓ., செந்தில்குமாரி, தாசில்தார் முத்து பாண்டியன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் அன்பழகன், பேரவை மாநில துணை செயலாளர் வெற்றிவேல், மாவட்ட செயலாளர் தமிழழகன் பங்கேற்றனர். ேரையூர் குண்ணத்துாரிலும் பொங்கல் பரிசுத்தொகுப்பை அமைச்சர் வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE