திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் தாலுகா கண்மாய்களில் நிரம்பியுள்ள தண்ணீரை தேக்கி வைக்க ஏதுவாக மீன் குத்தகையை தவிர்க்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
வைகை அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரால் இந்த தாலுகாவில் தென்கால், பானாங்குளம், சேமட்டான், குறுக்கட்டான், செவ்வந்திகுளம், மேல நெடுங்குளம், பெருங்குடி, விளாச்சேரி, நிலையூர் பெரிய கண்மாய்கள் நிரம்பும். கண்மாய்கள் தண்ணீர்மூலம் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அந்தந்த பகுதி நிலத்தடி நீர் ஆதாரமாகவும் இக்கண்மாய்கள் உள்ளன. இந்தாண்டு வைகை தண்ணீர் குறைந்த நாட்கள் திறக்கப்பட்டாலும் மழைநீரால் கண்மாய்கள் நிரம்பின.கண்மாய்களை மீன் குத்தகைக்கு விட்டால் மீன்களை வளர்க்க விவசாயத்திற்கு தேவையான நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாது.
மீன்களை பிடிக்க தண்ணீர் திறந்து வெளியேற்றப்படும். தண்ணீர் வீணாவதுடன், விவசாயமும் முடங்கிவிடும். மீன்குத்தகையை தவிர்க்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE