பொது செய்தி

தமிழ்நாடு

குடியரசு தின அணிவகுப்பை ரத்து செய்ய வேண்டும்: சுப்பிரமணியன் சாமி

Updated : ஜன 06, 2021 | Added : ஜன 06, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: டில்லியில் குடியரசு தின அணிவகுப்பை ரத்து செய்ய வேண்டும் என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: டில்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பை, மோடி அரசு ரத்து செய்ய வேண்டும். அணிவகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு இது நியாயமானதாக இருக்காது. இவ்வாறு அவர்
BJP,Subramanian Swamy,PM Modi, சுப்பிரமணியன் சாமி,பா.ஜ

புதுடில்லி: டில்லியில் குடியரசு தின அணிவகுப்பை ரத்து செய்ய வேண்டும் என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: டில்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பை, மோடி அரசு ரத்து செய்ய வேண்டும். அணிவகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு இது நியாயமானதாக இருக்காது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


latest tamil news



இந்தியாவின், 71வது குடியரசு தினம், வரும், 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதில், சிறப்பு விருந்தினராக, ஐரோப்பிய நாடான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்ள இருந்தார். இந்நிலையில், பிரிட்டனில், அதிக வீரியமுள்ள, உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருவதால், இந்தியா வரும் திட்டத்தை, போரிஸ் ஜான்சன் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
06-ஜன-202113:15:07 IST Report Abuse
S.Baliah Seer சுதந்திர தினத்தை மட்டுமே கொண்டாடலாம்.குடியரசு தினமும் வேண்டாம் ,அதற்கு அரசு விடுமுறையும் வேண்டாம்.வெட்டி செலவுகளைத் தவிர்க்க முதலில் மத்திய அரசு முன்வரவேண்டும்.
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
06-ஜன-202113:44:39 IST Report Abuse
Malick Rajaஇது போன்று பலரும் உயரிய சிந்தனையுடன் கருத்தெழுவது இந்தியர்களின் மாண்புக்கு புகழ் சேர்க்கும் .. ஏதாவது ஒரு ஊரை ஒவ்வொரு சுதந்திர ,குடியரசு நாட்களில் உயர்வற செய்வது நல்லறத்தில் உள்ளதை சிறப்பிக்கும் .....
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
06-ஜன-202116:48:29 IST Report Abuse
Endrum Indianஅவசியமில்லை??? இப்போ போரிஸ் ஜான்சன் இந்திய குடியரசு நாளில் முக்கிய விருந்தினராக இங்கு வரமாட்டார் என்று செய்தி வந்து விட்டது?????...
Rate this:
Cancel
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
06-ஜன-202111:18:29 IST Report Abuse
ShivRam ShivShyam இவர் சில தடவை உளறினாலும் பல தடவை சரியாக பேசுவார் .. ஜனாதிபதி கொடியேற்ற பிரதமர் மற்றும் சில பல MP க்கள் மற்றும் கலந்து கொண்டு சிறிய நிகழ்ச்சியாக செய்ய வேண்டும் .. கண்டிப்பாக ராணுவ அணிவகுப்போ அல்லது கலாசார ஊர்திகளோ இல்லாமல் மொத்தத்தில் சவ்மி கூறியவாறு மற்ற எல்லாம் ரத்து செய்ய பட வேண்டும் ..
Rate this:
Cancel
Maharajan - Bangalore,குவைத்
06-ஜன-202110:17:26 IST Report Abuse
Maharajan அதெப்படி ...விளம்பரம் இல்லையேல் நம் கட்சியே இல்லையே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X