கடலுார் : கடலுாரில் லயன்ஸ் கிளப் சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கடலுார் லயன்ஸ் கிளப் தலைவரும், லட்சுமி செக்யூரிட்டி சர்வீஸ் நிர்வாகியுமான தினகரன் பிறந்த நாள் விழா, செல்லங்குப்பத்தில் நடந்தது. தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., அய்யப்பன், லயன்ஸ் கிளப் முதல் துணை ஆளுனர் சுரேஷ் நீலகண்டன் தலைமை தாங்கி, 200 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.விழாவில் டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் பிரகாஷ், வேலன் ஸ்டீல்ஸ் வேல்முருகன், லாரி அதிபர் ராமலிங்கம், கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதிபெருமாள், முன்னாள் ஊராட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன், ஊராட்சித் தலைவர்கள் முத்துக்குமாரசாமி, சுரேஷ், மனோகரன், ரோட்டரி ராஜன், சங்கமம் ரோட்டரி சங்கத் தலைவர் சன் பிரைட் பிரகாஷ், பிரதிநிதி கோவலன், மீனவரணி தமிழரசன், ஒப்பந்ததாரர் ராஜசேகர், கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் வினோத், பைனான்ஸ் ராஜா, லயன்ஸ் கிளப் மண்டலத் தலைவர் சரவணன், மாவட்டத் தலைவர்கள் சரவணன், தர்மராஜ், செல்வகுரு, ரமேஷ், பாஸ்கரன், கடலுார் தலைவர் தம்புராஜ் பங்கேற்றனர்.லட்சுமி செக்யூரிட்டி சர்வீஸ் நிர்வாகி சரத் தினகரன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE