புதுடில்லி: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, முதல்வராக இருந்த போது, தனது வீட்டை புதுப்பிக்க, 6 மாதத்தில் ரூ.82 லட்சத்தை தாராளமாக செலவு செய்தது, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அம்பலமாகி உள்ளது. இந்த செலவினங்கள் அனைத்தும் இந்திய அரசால் செலுத்தப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரைச் சேர்ந்த சமூக ஆர்வலரான இனாம் அன் நபி சவுதகர், தகவல் அறியும் உரிமை சட்டத்தில், கேள்வி ஒன்றை கேட்டிருந்தார். அதற்கான பதிலில், மெஹபூபா முப்தி, ஸ்ரீநகரின் குப்கர் சாலையில் உள்ள தனது வீட்டை புதுப்பிக்க, ஜனவரி - ஜூன் 2018 காலகட்டத்தில், பெட்ஷீட், மரச்சாமான்கள், டிவி உள்ளிட்டவை வாங்க, 80 லட்ச ரூபாயை செலவு செய்தது தெரிய வந்துள்ளது.

மார்ச், 28, 2018ம் தேதியில், ஒரே நாளில் தரை விரிப்புகள் வாங்க மட்டும், ரூ.28 லட்சம் செலவு செய்திருக்கிறார். 2018 ஜூன் மாதத்தில், ரூ.22 லட்சம் மதிப்புள்ள டிவி உள்பட, 25 லட்சம் ரூபாய்க்கு செலவு செய்துள்ளார். 2020 செப்., 1ம் தேதியிட்ட ஆர்டிஐ அளித்துள்ள பதிலின் படி, 2017 ஜன.,30ம் தேதி ரூ.14 லட்சம் செலவிட்டதாகவும், தனது வீட்டின் தோட்டத்தில் வைக்க, ரூ.2,94,314 லட்சம் மதிப்பில் குடை வாங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018 பிப்., 22ம் தேதி, ரூ.11,62,000 மதிப்புள்ள படுக்கை விரிப்புகள் வாங்கப்பட்டுள்ளன. 2018 மார்ச் மாதத்தில், பொருட்கள் வாங்க மட்டும், சுமார் ரூ.25 லட்சமும், தரைவிரிப்புகளுக்கு ரூ.28 லட்சமும் முப்தி செலவிட்டார். இந்த செலவினங்களை இந்திய அரசு செலுத்தியது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE