பொது செய்தி

தமிழ்நாடு

பண்ணைப்பட்டியில் யானைகள் முகாம்

Added : ஜன 06, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : ரெட்டியார்சத்திரம் அருகே பண்ணைப்பட்டியில் யானைகள் முகாமிட்டு இருப்பதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் திண்டுக்கல், ரெட்டியார்சத்திரம், கன்னிவாடி, பண்ணைப்பட்டியில் விவசாயிகள் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் உணவுக்காக மலைப்பகுதியில் இருந்து 8 க்கும் மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் பண்ணைப்பட்டி அருகே

திண்டுக்கல் : ரெட்டியார்சத்திரம் அருகே பண்ணைப்பட்டியில் யானைகள் முகாமிட்டு இருப்பதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் திண்டுக்கல், ரெட்டியார்சத்திரம், கன்னிவாடி, பண்ணைப்பட்டியில் விவசாயிகள் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் உணவுக்காக மலைப்பகுதியில் இருந்து 8 க்கும் மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் பண்ணைப்பட்டி அருகே முகாமிட்டுள்ளன.இவை விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. பத்து நாட்களாக முகாமிட்டுள்ள யானைகளால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். அதே சமயம் யானைகளை 'ட்ரோன் கேமரா' மூலம் கண்காணித்து பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறை ஈடுபட்டுள்ளது.அவற்றை பகலில் விரட்டியடித்தாலும் இரவில் மீண்டும் விளை நிலங்களுக்குள் புகுந்து விடுகின்றன.

'மலையடிவாரம், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் பொதுமக்கள் தேவையின்றி இரவில் வெளியே வர வேண்டாம்' என, வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X