புதுடில்லி: லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவின் மகள், அஞ்சலி பிர்லா, யு.பி.எஸ்.சி., எனப்படும் சிவில் சர்வீஸ் தேர்வில், முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளார்.
யு.பி.எஸ்.சி., - 2019 தேர்வின் அடிப்படையில் வெளியிடப்பட்ட, 89 சிவில் சர்வீஸ் பணிகளுக்கான நபர்களில் லோக்சபா சபாநாயகர், ஓம் பிர்லாவின் மகள் அஞ்சலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணி நியமனம் பெற உள்ளார்.

அரசியல் அறிவியலில் (ஹானர்ஸ்) பட்டம் பெற்றுள்ள அஞ்சலி, சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காக தயாராகி வந்தார். 2019ம் ஆண்டு நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில் இவர் கலந்து கொண்டார். அதன் முடிவுகள், கடந்த ஆக.,4ம் தேதி வெளியானது. அதில் நிரப்பப்பட்ட பணிகள் போக, மீதமிருக்கும் பணிகளுக்காக 89 நபர்களில், அஞ்சலி பிர்லாவும் இடம் பிடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். மக்களுக்கு சேவை செய்ய நான் சிவில் சர்வீசை தேர்ந்தெடுத்தேன். நான் தேர்வுக்கு தயாரான காலம் முதல் என் குடும்பம் முழுவதும் முழு ஒத்துழைப்பு அளித்தது. வாழ்வில் நான் சாதிக்க வேண்டும் என உற்சாகம் அளித்தனர். இவ்வாறு அவர் கூறினார். அஞ்சலியின் மூத்த சகோதரி அஹன்ஷா, சார்டர்ட் அக்கவுண்டன்ட் ஆக இருக்கிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE